இளைஞர்களின் மீதான இணையத் தாக்குதல் அதிகரிப்பு!



Image result for hate speech
the conversation


இணையம்தான் இன்று மக்கள் கூடும் டிஜிட்டல் பொது இடங்களாக உள்ளன. மக்கள் கூடும் இடங்களில் நடைபெறும் கேலி, கிண்டல், வன்முறை, ஆபாசப்பதிவுகள்  என அனைத்தும் டிஜிட்டல் உலகிலும் நடைபெறுகிறது. தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்ட தகவல் அறிக்கையில் பத்தில் ஒரு இந்தியர் இதுபோன்ற இணையத்தாக்குதல்களை சந்தித்து வருவதாக தெரிய வந்துள்ளது. ஆண்டுதோறும் இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.


சைல்ட் ரைட்ஸ் அண்ட் யூ எனும் தன்னார்வ அமைப்பு டில்லி பகுதியில் எடுத்த ஆய்வுப்படி, இளைஞர்கள் மீதான தாக்குதல் (13-18) 22.4 சதவீதம் அதிகரித்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இளைஞர்களில் நான்கில் ஒருவர் மார்பிங் செய்த புகைப்படத்தைப் பார்ப்பதாகவும், அதுபற்றி காவல்துறையில் புகார் செய்வதில்லை என்றும் தெரிய வந்துள்ளது.

2017ஆம் ஆண்டை விட பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான இணையத்தாக்குதல் அதிகரித்துள்ளது. மொத்தத்தில் இணையம் சார்ந்த குற்றங்கள் 2018ஆம் ஆண்டில் 25 சதவீதம் அதிகரித்துள்ளன.

இணையத்தில்  சொற்கள் சார்ந்த வன்முறை இயல்பானதாக மாறிவிட்டது. தொலைவில் இருப்பதாலும், முகம் தெரியாது என்பதாலும் தன்னுடைய மனம் போல ஒருவர் மீது அவதூறாக பேசமுடிகிறது. அதற்கு எதிரானவர்களை வசை பாட முடிகிறது என்கிறார் இணைய ஆய்வாளரான நிஷாந்த் ஷா. இணையத்தைப் பயன்படுத்துபவர்களில் மூன்றில் இருவர் குழந்தைகளாக உள்ளதை ஐ.நா அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.

நன்றி - இந்தியா ஸ்பென்ட்ஸ்