தனிமைப்படுத்தலால் பிரபலமான எழுத்தாளர்கள்!







The Office Trending GIF by Hub101
giphy






நோய் தாக்காமல் தனியாக இருக்கச்சொல்லி அரசு உத்தரவிட்டிருக்கிறது. உற்சாகமாக வேலை பார்க்கும் மனிதர்களையும் இந்த காலகட்டம் சோம்பேறிகளாக்கி விடக்கூடும். இதனால் இப்படி நோய் பரவிய,  போர் காலகட்டங்களில் சாதனைகள் படைத்த எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் பற்றிய செய்திகள் இதோ..

ஷேக்ஸ்பியர்

தனது கிங் லியர் எனும் படைப்பை எழுதும்போது நோய்களுக்கு பயந்து தனிமையில் இருந்தார். அப்போது வெளியில் பிளேக் நோய் வேகமாக பரவி வந்தது. அப்பாதிப்பிலிருந்து தப்பிக்க நினைத்தார் ஷேக்ஸ்பியர். அப்போது அரசு பொது இடங்கள் அனைத்தையும் மூடியிருந்தது. இதனால் இவர் பங்குதாரராகவும், எழுத்தாளராகவும் இருந்த கிங் நாடக கம்பெனியை நடத்த முடியவில்லை. இக்காலகட்டத்தில் கிங் லியர், மேக்பத், ஆன்டனி அண்ட் கிளியோபாட்ரா ஆகிய படைப்புகளை எழுதி முடித்தார்.

ஐசக் நியூட்டன் 

இவர் ஷேக்ஸ்பியருக்கு பின்னர் இதே போல தனியாக இருந்து அறிவியல் சாதனைகளை செய்தார். 1665ஆம்ஆண்டு இங்கிலாந்தில் வாழ்ந்த ஐசக் நியூட்டனுக்கு சோதனை பிளேக் வடிவில் வந்தது. அப்போது அவருக்கு இருபது வயது. கேம்பிரிட்ஜ் பல்கலையில் வகுப்புகள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்து அறுபது கி.மீ தொலைவிலிருந்த வீட்டுக்கு நியூட்டன் சென்றுவிட்டார். அங்கிருந்துதான் கால்குலஸ், கண்ணாடி தொடர்பான பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை செய்தார். புவியீர்ப்பு விசை பற்றியும் கண்டுபிடித்தது இக்காலகட்டத்தில்தான்.


எட்வர்ட் முன்ச் 

ஸ்க்ரீம் என்ற புகழ்பெற்ற ஓவியத்தை வரைந்த ஓவியர். நார்வேயில் வாழ்ந்த வந்தவர் ஸ்பானிஷ் ப்ளூ காய்ச்சலுக்கு அஞ்சி தனித்திருக்க நினைத்தார். ஆனால் அதற்குள் காய்ச்சல் தொற்றிக்கொண்டது. அந்த உடல்நிலையிலும் ஓவியங்கள் வரைவதை நிறுத்தவில்லை. தனது படுக்கையில் எழுந்து உட்கார்ந்திருக்கும் படத்தை அவரே வரைந்துள்ளார்.

தாமஸ் நாசே

எலிசபெத் கால நாடக ஆசிரியர். 1592ஆம் ஆண்டு பிளேக் நோய் பரவல் தீவிரமாக இருந்தது. நோயில் சிக்கினால் கலையுலகம் கஷ்டப்படுமே என தலைமறைவாக இருந்தார். இக்காலகட்டத்தில் Summers' Last Will and Testament, என்ற படைப்பை உருவாக்கினார். இது பிளேக் நோயிற்காக என்னென்ன கஷ்டங்கள் பட்டார் என்பதை சொல்லும் படைப்புதான். 


நன்றி - மென்டல் ஃபிளாஸ் - மைக்கேல் டெப்சாக்










பிரபலமான இடுகைகள்