உருளைக்கிழங்கில் அப்படி என்னதான் இருக்கிறது?






உருளைக்கிழங்கில் என்ன இருக்கிறது?

தெற்கு அமெரிக்காவில் முதல் பயிராக விளைவிக்கப்பட்டு ஏழாயிரம் ஆண்டுகளாகிறது. உருளைக்கிழங்கு பல்வேறு பட்டினி, பஞ்ச காலங்களில் முக்கியமான உணவுப்பொருளாக இருந்திருக்கிறது. அப்படி இல்லாத காலங்களில் தீனிப் பொருளாக சிப்ஸ், ஃபிரெஞ்ச் ஃபிரைஸ் என்ற பெயரில் பரிமாறப்பட்டுள்ளது. இன்றும் சமோசாவில் உருளைக்கிழங்கை விட்டால் கதி மோட்சமில்லை. பெருமளவு விலை ஏறாத காய்கறி இது ஒன்றுதான். அதனால்தான் எப்போதும் ஓட்டல் சாம்பாரில் இதனை மிதக்க விடுகின்றனர்.


உருளைக்கிழங்கு புகழ்பெற்றதற்கு காரணம் அதிலுள்ள ஸ்டார்ச்தான். இதில் விட்டமின் சி, பி6, ஆன்டிஆக்சிடன்ட்ஸ், பொட்டாசியம் ஆகியவை உள்ளது. நார்ச்சத்து அதிகம். வேகவைத்து சாப்பிட்டால் சத்துகள் கிடைக்கும். பொரித்தால் கொழுப்பு ஏறிவிடும். உருளைக்கிழங்கிலும் பின்னர் நமது உடலிலும்தான்.

கேக், ஐஸ்க்ரீம், சாலட், பிஸ்கெட் என பல்வேறு பொருட்களின் தயாரிப்பில் உருளைக்கிழங்கு நிலைய வித்வான் போல எப்போதும் இருக்கும். காரணம் அனைத்து காய்கறிகளை விட காசு குறைவு. மாவுச்சத்து அதிகம். 1995ஆம்ஆண்டு விண்வெளியிலும் உருளைக்கிழங்கு விளைவிக்கப்பட்டது.


இனிப்பு உருளைக்கிழங்கு இன்று உலகின் பல்வேறு நாடுகளில் அமலுக்கு வந்துவிட்டது. இதில் பீட்டா கரோட்டின் அளவு அதிகம், இனிப்பு தன்மை நாம் நெஸ்கஃபேயில் கலந்து குடிக்கும் வெள்ளைச் சர்க்கரையை விட அதிகம். சுருக்காமாக இதிலுள்ள ஸ்டார்ச் மால்டோசாக மாறுகிறது. இதனால் இனிப்புத்தன்மை அதிகமாக உள்ளது.


நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்