நோயும், அதற்கான மருந்தும் கூட சீனாவிடமிருந்துதான் பெறுகிறோம்!
அண்மையில் உலக சுகாதார நிறுவனம் கோவிட் 19 நோய் பாதிப்பிற்கான 35 தடுப்பு ஊசி மருந்துகளை மேம்படுத்தி வருவதாக அறிவித்துள்ளது. அதில் ஒரு ஊசி மருந்து இந்தியாவிலுள்ள முன்னணி மருந்து நிறுவனமான சீரம் இன்ஸ்டிடியூட் தயாரிக்கிறது. இந்த நிறுவனத்துடன் அமெரிக்க நிறுவனமான கோடாஜெனிக்சும் இணைந்துள்ளது. ஆதார் பூனாவா, சீரம் இன்ஸ்டிடியூட்டின் இயக்குநர் ஆவார். தடுப்பூசிகள் பற்றி அவரிடம் பேசினோம்.
இந்தியாவிலுள்ள உள்நாட்டு மருந்து சந்தையே கோவிட் 19ஆல் ஆட்டம் கண்டுள்ளது. ஏனெனில் மருந்துப்பொருட்களுக்கான பகுதிப்பொருட்களில் பெரும்பகுதி சீனாவிலிருந்து பெறப்பட்டது அல்லவா?
மருந்து துறை மட்டுமல்ல வாகனத்துறை கூட கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவில் ஏற்பட்டுள்ள இந்த பாதிப்பு மூலம் நாம் இந்தியாவில் தயாரிக்கும் பல்வேறு செயல்பாடுகளை முடுக்கிவிடுவது அவசியம். இதுபோல சவாலான காலகட்டங்களைச் சமாளிக்க நமக்கு சரியான பாதை தேவை. அரசு இத்துறையில் உள்ள பல்வேறு கிடுக்குப்பிடி விதிகளை தளர்த்தி மருந்து நிறுவனங்களுக்கு ஊக்கமளிக்க முன்வர வேண்டும். இதன் வழியாகத்தான் நாம் நோய்களுக்கு தேவையான புதிய மருந்துகளை எளிதாக தயாரித்து வழங்க முடியும்.
தேசிய சுகாதார ஆய்வுத்தகவல்படி குழந்தைகளில் 40 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகளே வழங்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறதே?
இந்திய அரசு மிஷன் இந்திரதனுஷ் என்ற பெயரில் தடுப்பூசித்திட்டத்தை நாடு முழுக்க கொண்டு சென்றுள்ளது. வறுமைக்கோட்டிலுள்ள குழந்தைகளின் இறப்பு சதவீதம் குறைய இந்த தடுப்பூசித் திட்டமே காரணம். அதையும் மீறி இதற்கு எதிர்ப்பான குழு வந்து கருத்து தெரிவித்தால் அதைக் கேட்டு விட்டு அமைதியாக இருப்பதே சிறந்தது. தடுப்பூசிக்கு எதிராக தடுப்புக்குழுவால் மக்கள் குழம்பிப் போயுள்ளார். அரசு தன்னுடைய அரசு மருத்துவமனைகளைப் பயன்படுத்தி தடுப்பூசி திட்டங்களை பெரியளவில் செயல்படுத்த முடியும்.
உலகின் தடுப்பூசி மருந்து தேவைகளில் இந்தியா 70 சதவீதம் பூர்த்தி செய்கிறது. இதனை மேம்படுத்த என்ன செய்யவேண்டும்?
பிசிஜி, டெட்டனஸ் மருந்துகளை குறிப்பிட்ட விலையில் விற்கவேண்டுமென அரசு கட்டுப்பாடுகளை வைத்துள்ளது. அரசு மருந்துத்துறையில் சாதிக்கவேண்டுமெனில் புதிய மருந்து கண்டுபிடிப்புகளுக்கு ஆதரவளிக்க வேண்டும். அரசு மருத்துவமனைகளின் வழியாக எங்களைப் போன்ற நிறுவனங்களை ஊக்குவிப்பது, தடுப்பூசிகளை இந்தியா முழுக்க பரவலாக்க உதவும்.
இந்தியாவில் மருந்துத்துறையில் தேவையான திறன்களையும், தொழில்முனைவோர்களையும் உருவாக்கி உள்ளோமா?
உள்நாட்டு மருந்துத்துறையில் புதிய மருந்துகளுக்கான ஆராய்ச்சிகள் இன்னும் மேம்பட வேண்டும். நாம் இன்றும் கூட கொரோனா வைரஸிற்கான தடுப்பூசி மருந்தில் முன்னணியில் உள்ளோம். அரசு தன் கொள்கைகளை மாற்றினால் இத்துறையில் நிறைய முன்னேற்றங்கள் நடக்க வாய்ப்புள்ளது. நாம் இன்றே இளைஞர்களுக்கு இத்துறையில் பயிற்சிகளை வழங்கத்தொடங்கினால் எதிர்காலத்தில் பெரும் மாற்றங்களை உருவாக்க முடியும்.
நன்றி - டைம்ஸ் - 10.3.2019
ஆங்கிலத்தில் - சுதிப்தா சென்குப்தா