இடுகைகள்

பசுமை வீடுகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கார்பன் வெளியீட்டைக் குறைக்கும் வீடுகள் - இங்கிலாந்தில் புது ரூல்!

படம்
giphy.com மாற்றம் தரும் பசுமை வீடுகள் !   இங்கிலாந்தில் உள்ள வீடுகளில் வெளியாகும் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை அரசு தொடங்கியுள்ளது. உலகம் முழுக்க கார்பன் வெளியீட்டுக்கு எதிரான மனநிலை உருவாகிவருகிறது. இதன்காரணமாக தனிநபரின் இயற்கைவள ஆதாரங்கள் செலவு, தொழிற்சாலைகளின் பங்கு, உணவுக்கு உதவும் பண்ணை விலங்குகள் என அனைத்தையும் சூழலியலாளர்கள் கண்காணிக்கத் தொடங்கியுள்ளனர். இங்கிலாந்தில் வெளியாகும் கார்பன் வெளியீட்டுக்கு, அங்கு வாழும் மக்களின் வீடுகளும் முக்கியக்காரணம் என அரசு கண்டறிந்துள்ளது. இதன்விளைவாக, 2022க்குள் கட்டப்படும் புதிய வீடுகள் கார்பன் வெளியீடு குறைந்த பசுமை வீடுகளாக்க முயன்று வருகிறது. இங்கிலாந்தில் ஆண்டுதோறும், 2 லட்சத்து 30 ஆயிரம் வீடுகள் புதிதாக கட்டப்பட்டு வருகின்றன. இந்த வீடுகளில் அறைகளை சூடாக வைக்க கரிம எரிபொருட்களை பயன்படுத்துகின்றனர். அவற்றைத் தவிர்க்க வைக்கும் வழிகளை அரசு தேடிவருகிறது. ஸ்காட்லாந்து, வேல்ஸ், வடக்கு அயர்லாந்து ஆகிய பகுதிகளிலும் பசுமை வீடுகளுக்கான விதிகள் அமலாக இருக்கின்றன. தற்போது வீடுகளுக்குத் தேவைப்படும் வெந்நீர் பொதுவா

பசுமை வீடுகள் கட்டலாம் வாங்க!

படம்
குங்குமம்\ ஷாலினி நியூட்டன் பரவும் பசுமைக் கட்டிடங்கள் பிஜூ பாஸ்கர்   இந்தியாவில் பிளாஸ்டிக் மற்றும் இயற்கையான பொருட்களைப் பயன்படுத்தி வீடுகளைக் கட்டும் பழக்கம் அதிகரித்து வருகிறது. பறவைகள், தேனீக்கள் தங்களுக்கான வீட்டை கட்டிக்கொள்ளும்போது மனிதர்களால் கட்ட முடியாதா? தற்போது இந்தியா முழுக்க குறிப்பிட்ட பகுதிகளில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டே வீடுகளை கட்டிக்கொள்ளும் பழக்கம் அதிகரித்து வருகிறது. திருவண்ணாமலையைச் சேர்ந்த பிஜூ பாஸ்கர், அருகில் கிடைக்கும் இயற்கைப் பொருட்களைக் கொண்டு தனது வீட்டை 45 நாட்களில் கட்டியுள்ளார். செலவு வெறும் 3.25 லட்சம் மட்டுமே.  “இயற்கைப் பொருட்கள் என்றாலும் பல ஆண்டுகள் உறுதியாக இருக்கும். நாங்கள் பிறரின் வீடுகளைக் கட்டுவதற்குக் காசு வாங்குவதில்லை. பதிலாக உணவுகளை அல்லது பொருட்களைக் கேட்டு வாங்கிக்கொள்வோம் ” என்றார் பாஸ்கர். கிராமத்தினருக்கு தன்னல்(Thannal) எனும் அமைப்பு மூலமாக வீடுகளைக் கட்டித்தந்து வருகிறார். கிடைக்கும் இடத்தில் விறுவிறுவென குறைந்த ஆட்களைக் கொண்டே வேலை பார்த்து பசுமை வீடுகளை எழுப்பிவிடுவது தன்னல் குழுவின் சாமர்த்தியம்.