இடுகைகள்

ஆனந்த் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பாதிக்கப்பட்ட மக்களுக்கு தானாக முன்வந்து உதவும் ஆனந்த்! - திருச்சி தன்னார்வத் தொண்டர் கதை!

படம்
  சூரியன் வானில் வெளிச்சம் காட்டியபோதும் கூட சிகே ஆனந்தின் பணி நிற்கவில்லை.  அவரது போன் அழைப்புகள் வந்துகொண்டு இருந்தன. மழைப்பொழிவால் நீரில் மூழ்கிய பல்வேறு இடங்களிலிருந்து உதவி கேட்டு அழைக்கும் அழைப்புகள்தான் அவை. படகு வேண்டும், உணவுக்காக காய்கறிகள் வேண்டும் என குரல்கள் ஏதேனும் உதவிகளை கோரியபடி இருந்தன.  அத்தனை அழைப்புகளையும் சமாளித்து காய்கறிகளை தேவையான உதவிகளை ஆனந்த் வழங்கிக்கொண்டே இருந்தார். முப்பது வயதான ஆனந்த், தன்னையொத்த உதவும் மனம் கொண்ட தன்னார்வலர்களின் குழுவை ஒருங்கிணைத்து மேற்சொன்ன அழைப்புகளுக்கு வரும் பல்வேறு உதவிகளை வழங்கி வருகிறார். வெள்ள பாதிப்பு பிரச்னை ஏற்பட்டபோது காலை ஏழுமணி தொடங்கி நள்ளிரவு வரை பணிகளில் ஈடுபட்டுக்கொண்டே இருந்தது இக்குழு.  கருமேகங்கள் திருச்சி நகரை சூழ்ந்தபோது, லிங்கம் நகர், அருள் நகர், செல்வம் நகர், ராஜலட்சுமி நகர் ஆகிய இடங்களிலிருந்து உதவி கோரி அழைப்புகள் வந்தன. உடனே தன்னுடைய பகுதியை சேர்ந்த சில இளைஞர்களை துணைக்கு அழைத்துக்கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிக்கு சென்றார் ஆனந்த். முதலில் முக்கொம்பு பகுதிக்கு போனவர், அங்கு மக்களுக்கு தேவையான தினசரி வாழ்க்கைக்க

செஸ்ஸை வேகமாக விளையாடினால் சந்தோஷம் கிடைக்காது! - விஸ்வநாதன் ஆனந்த், செஸ் விளையாட்டு சாதனையாளர்

படம்
                விஸ்வநாதன் ஆனந்த் செஸ் வீரர் பெருந்தொற்று காலத்தில் நிறைய மக்கள் செஸ் விளையாடி வருகின்றனர் . இந்த எண்ணிக்கை அதிகரித்து வருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள் ? செஸ் விளையாட நினைத்தவர்கள் கூட முன்னர் நேரமில்லாமல் தவித்தனர் . ஆனால் இந்த ஆண்டில் நிறைய மக்கள் செஸ் விளையாடத் தொடங்கியுள்ளனர் . நிறைய கடைகளில் செஸ் போர்டுகளோடு , அதற்கான கடிகாரங்களும் சிறப்பாக விற்பனையாகிவருகி்ன்றன . எனக்கு மக்களிடையே ஏற்பட்டுள்ள மாற்றம் உண்மையில் ஆச்சரியம் தருகிறது . முன்னாள் சாம்பியனானா கார்ல்சன் வேகமாக செஸ் ஆடுவது பற்றி பயிற்சி அளிக்கிறார் . அப்படியென்றால் கிளாசிக் செஸ் என்பது எப்படியிருக்கும் ? என்னுடைய தலைமுறையினர் கிளாசிக்கலான செஸ்ஸை விளையாடினர் . ஆனால் அடுத்த தலைமுறை அதில் மாற்றம் ஏற்படுத்த விரும்புகிறது . உண்மையில் இந்த விளையாட்டு வேகமாக மாறினால் அதில் விளையாடும் சந்தோஷம் கிடைக்குமா என்று எனக்கு தெரியவில்லை . கிளாசிக் செஸ்ஸில் மாற்றங்களை ஏற்படுத்தி விளையாடவேண்டும் என்று் கார்ல்சன் கூறியுள்ளார் . அது உண்மையும் கூடத்தான் . ஆனால் வேகமாக செஸ் ஆடத்தொடங்கினால் பின்னாளில் பழைய