இடுகைகள்

அகில் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலிக்கும் பெண் சொல்லும் தத்துவங்களை காதலன் கண்டடையும் பயணம்! - மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் 2021

படம்
  மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் மோஸ்ட் எலிஜிபிள் பேச்சுலர் தெலுங்கு பொம்மரில்லு பாஸ்கர் கோபி சுந்தர் திருமணத்திற்கான தேவை, அதை செய்துகொள்பவர்களின் தகுதி பற்றி பேசியிருக்கும் படம்.  நவீன காலத்தில் திருமணம் பற்றி நமக்கிருக்கும் கருத்துகள் எல்லாம் பிறர் உருவாக்கியவை. அக்கருத்துகளை நாமே யோசித்து உருவாக்கினால்தான் கல்யாண வாழ்க்கை உருப்படியாகும் என பாஸ்கர் தனது படத்தில் பேசியிருக்கிறார்.  ஹர்ஷா, அமெரிக்காவில் வேலை செய்கிறார். ஐடி கம்பெனியேதான். அங்கிருந்து இந்தியா வர ஏற்பாடாகிறது. எதற்கு? இருபதே நாட்களில் ஒரு பெண்ணைத் தேர்ந்தெடுத்து கல்யாணம் செய்துகொண்டு அமெரிக்காவுக்கு செல்வதுதான் திட்டம். மொத்தம் இருபது பெண்களை சந்தித்து பேசுவது பிளான். இதில் எந்த பெண் ஓகே என்றாலும் உடனே கல்யாணத்தை செய்து கூட்டிபோக அத்தனை ஏற்பாடுகளும் ரெடியாக வைத்திருக்கிறார்கள். அப்போதுதான் ஹர்ஷாவின் வாழ்க்கையில் தனிக்குரல கலைஞராக விபா வருகிறாள். திருமணம் பற்றி ஹர்ஷா நினைக்கும் அத்தனை விஷயங்களையும் உடைக்கிறாள். இதனால் ஹர்ஷாவுக்கு அவளை பிடித்துப்போகிறது.  அவள் தன்னிடம் கேட்கும் அத்தனை கேள்விகளையும் தான் பெண் பார்க்கப் போகும்

ஹலோ சொல்லலாமா? அகிலின் இளமைத் தாண்டவம்

படம்
ஹலோ (தெலுங்கு, 2017) இயக்கம்: விக்ரம் கே குமார் கேமரா: பி.எஸ்.வினோத் படத்தொகுப்பு:  பிரவின் புடி அனுப் ரூபென்ஸ் சின்ன வயதில் உருவான காதல், இளம் பருவத்தில் ஒன்றாக சேர்வதுதான் படம் சொல்லும் கதை. தெருவில் வாழும் சிறுவன் சீனு, தெருவில் இந்திப் பாடல்களை வாசித்துக் காட்டி பானிபூரி சாப்பிட்டு வருகிறான். அதாவது படத்தில் அப்படித்தான் காட்டுகிறார்கள். அங்கே அதே கடையில் பானிபூரி சாப்பிட சிறுமி ஜூன்னு(மைரா தண்டேகர்) வருகிறாள். அவளுக்கும் சீனுவுக்கும் இடையில் ஒருவித இணக்கம் வருகிறது. இசையை வாசித்துக் காட்டும்போது, ஜூன்னு அவனை இடைமறித்து நீயே ட்யூன் ஒன்றை உருவாக்கு.அதுதானே டேலண்ட் என்று சொல்லிவிட்டு பானிபூரியை சாப்பிட்டு போய்விடுகிறாள். நம்மீது அக்கறை கொள்பவர்கள் மீது நாமும் பரஸ்பரம் அக்கறை காட்டுவோம் அல்லவா? அதேதான் இங்கும் நிகழ்கிறது. அப்போது சீனு, ஜூன்னு இருவரும் பிரியும்போது என்ன நிகழ்கிறது, இருவரும் ஒன்று சேர்ந்தார்களா என்பதே கதை. விக்ரம் குமாரின் மேக்கிங், படம் பார்க்கும் அனுபவத்தை மிக இனிமையாக்குகிறது. அதுவும் வினோத்தின் ஒளிப்பது படத்தின் ஒவ்வொரு அங்குலத்தையும் ர