இடுகைகள்

இந்தியர்கள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நிறுவனங்களின் இயக்குநர்களாக இந்தியர்கள் நியமிக்கப்பட என்ன காரணம்?

படம்
  pixabay சாதிக்கும் இந்திய இயக்குநர்கள்! அண்மையில் இந்தியரான லீனா நாயர், சானல் பிரெஞ்சு நிறுவனத்தின் முதல் பெண் இயக்குநராக பதவியேற்றார். இதன் மூலம், பெப்சிகோவின் இயக்குநராக இருந்த இந்திரா நூயிக்கு அடுத்ததாக பெண் இயக்குநர் என்ற பெருமையைப் பெற்றிருக்கிறார்.  இந்தியர்கள் இப்போது பெரும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு இயக்குநராக மாறிவருகிறார்கள். மைக்ரோசாஃப்டின்  சத்யா நாதெள்ளா, ஆல்பபெட்டின்  சுந்தர் பிச்சை ஆகியோர் இதில் குறிப்பிடத்தக்கவர்கள். ஐபிஎம், நோவர்டிஸ், அடோப், ட்விட்டர், ஹார்மன், விமியோ ஆகிய நிறுவனங்களிலும் இந்தியர்கள் இயக்குநர்களாக உள்ளனர். ”பிறப்பு, கல்வி, வேலை என அனைத்து விஷயங்களுக்கும் இந்தியர்கள் போராடி வளர்வதால் இயற்கையாகவே அவர்கள் சிறந்த மேலாளர்களாக இருக்கிறார்கள்” என்றார் டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான ஆர்.கோபாலகிருஷ்ணன். பியூ நிறுவன ஆய்வுப்படி(2016படி), 77 சதவீத இந்தியர்கள் குறைந்தப்பட்சம் ஒரு பட்டம் அல்லது அதற்கு மேற்பட்ட பட்டங்களை இந்தியர்கள் பெற்றுள்ளனர் என கண்டறிந்தது. இந்த வகையில் 31 சதவீத அமெரிக்கர்கள் மட்டுமே பட்டம் பெற்றவர்கள். ”தொழிலை நடத்திச் செல்ல புதுமைத்

டன்கிர்க்கில் போராடிய இந்திய முஸ்லீம் படையினரை உலகம் மறந்துபோய்விட்டது! - எழுத்தாளர் போவ்மன்

படம்
            நேர்காணல் ஜி போவ்மன்   உலக நாடுகளிடையே அரசியல் நிலைமை மாறியுள்ளது . பிரெக்ஸிட் , இஸ்லாமியர்களுக்கு எதிரான மனநிலை என்று உள்ளது . இப்போது தெற்காசியாவில் உள்ள ராணுவ வரலாற்றைச் சொல்லுவது மக்களின் மனநிலையை மாற்றுமா ? நான் அப்படி நம்புகிறேன் . இதுவரை சொல்லாத ஆனால் மக்களுக்கு சொல்லவேண்டிய கதை இந்த நூலில் உள்ளது . இதன் மூலம் மக்கள் பற்றிய சின்னத்தனமான எண்ணம் , மதவெறி ஆகியவற்றை மாற்ற முடியும் என நினைக்கிறேன் . 2017 ஆம் ஆண்டு நோலன் டன்கிர்க் படத்தை எடுத்தார் . ஆனால் அதில் கூட இந்திய முகங்களை பார்க்க முடியவில்லையே , அது உங்களை ஆச்சரியப்படுத்தியதா ? நோலன் நினைத்திருந்தால் படத்தை நேர்மையாக எடுத்திருந்தால் அதில் இந்தியர்களின் முகத்தை பார்த்திருக்கலாம் . அப்படி இல்லாத்தை படத்தில் பார்த்து எனக்கு பெரும் ஏமாற்றமாகிவிட்டது . ஆனால் ஆச்சரியப்படவில்லை . ஏனென்றால் கடந்த எண்பது ஆண்டுகளாக யாருமே இந்தியர்களின் பங்களிப்பு பற்றி பேசவில்லை , நோலன் மட்டும் எப்படி பேசுவார் ? இப்போது நமக்கு இருக்கும் சவால் , இப்படிப்பட்ட சம்பவங்களை வைத்து தெற்காசியாவைச் சேர்ந்த இயக்