இடுகைகள்

கொடி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேனீ மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவது எப்போது கண்டறியப்பட்டது?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி அமெரிக்காவின் தேசிய மலர் எது? 1986ஆம் ஆண்டு அக்டோபர் ஏழாம் தேதி ரோஜா, அமெரிக்காவின் தேசிய மலராக அறிவிக்கப்பட்டது. தேனீ மூலம் மகரந்தச்சேர்க்கை நடைபெறுவது எப்போது கண்டறியப்பட்டது? ஜோசப் காட்லெப் கோல்ராய்டர் என்ற ஆராய்ச்சியாளர், தேனீ மூலம் நடைபெறும் மகரந்த சேர்க்கையை 1761ஆம் ஆண்டு கண்டுபிடித்தார். இவர்தான், செடிகள் பூச்சிகள் மூலம் மகரந்தச்சேர்க்கை செய்வதை ஆதாரத்துடன் கண்டுபிடித்தவர். லில்லி விக்டோரியா அமேசானிகா என்ற தாவரத்தின் சிறப்பு அம்சம் என்ன? பிரமாண்டமானது. அமேசான் ஆற்றில் வளரக்கூடியது. இதன் இலைகள் ஆறு அடி நீளம் கொண்டவை. இலைகளில் சிறிய குழந்தையைக் கூட வைத்துக்கொள்ளலாம். வளர்ச்சி அடைந்த இலைகள் நாற்பத்தைந்து கிலோ எடையைத் தாங்கும். பூக்கள், முப்பது செ.மீ. அளவு கொண்டவை. இரண்டு இரவுகள் மட்டும்தான் மலர்ந்து பூக்கள் இருக்கும். முதலில் வெள்ளையாக இருந்து இரண்டாவது இரவில் ரோஸ் நிறம் அல்லது கத்தரிப்பூ நிறத்தில் காட்சியளிக்கும். ஒரு தாவரத்தில் ஒரே நேரத்தில் ஒரு பூ மட்டுமே பூக்கும். இரண்டு இரவுகளுக்கு பிறகு பூக்கள், நீரில் மூழ்கிவிடும். ஆரஞ்சு மரத்தின் ...

அமெரிக்காவின் முதல் பெண் மருத்துவர், ஆழ்கடல் டைவர்களுக்கு ஏற்படும் அழுத்த பாதிப்பு

படம்
            அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி கொடிகளை வடிவமைப்பதில் உள்ள நுட்பங்கள் என்ன? தேசியக்கொடியோ, கட்சிக்கொடியோ, ராணுவப்பிரிவு கொடியோ அதை கம்பத்தில் கட்டி இறக்கவேண்டும் என்பதை மனதில் இருத்திக்கொள்ளுங்கள். எனவே, அதை செவ்வகமாக இருந்தால்போதும் என வடிவமைக்கக்கூடாது. கொடியாக கம்பத்தில் பறக்கும்போது தெளிவாக தெரிய வேண்டும். கொடியை எளிமையாக வடிவமைக்கவேண்டும். எளிமை என்பதில் அதை நினைவுகூர்ந்து தாளில் யாரேனும் வரையும் விதமாக இருப்பதும் அடங்கும். அதை பல்வேறு வடிவங்களில் சுருக்கினாலும் வேறுபாடு வரக்கூடாது. நல்ல விஷயங்களை பிறரிடம் இருந்து காப்பி அடிக்கலாம் என்று கூறுவார்கள். ஆனால் கொடிகளைப் பொறுத்தவரை இன்னொரு நாட்டைப் போல இருந்தால் சொந்த நாட்டு மக்களே பாதிக்கப்படுவார்கள். கொடியில், நிறங்கள் தெளிவாக தெரியவேண்டும். நிறங்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பது நல்லது. வெள்ளை நிற பின்னணியில் நீலநிறம் என கொடி தெளிவாக இருப்பது நல்லது. கொடியில் குறிப்பிட இனக்குழு அல்லது தனித்துவத்தை உணர்த்தும் விஷயங்கள் இருக்கவேண்டும். குழப்பத்தை தருவதாக மாறிவிடக்கூடாது. வார்த்தை, இலச்சினை என ஒன்றையே ...

கொடிகளை வடிவமைப்பதில் நிறம், இலச்சினைக்கு முக்கிய பங்குண்டு!

படம்
      கொடிகளை வடிவமைப்பதில் நிறங்களுக்கு முக்கியப் பங்குண்டு! சிவப்பு, நீலம், பச்சை, கறுப்பு, மஞ்சள், வெள்ளை ஆகியவை கொடிகளில் பயன்படுத்தும் முக்கியமான நிறங்கள். இவை தவிர, கருநீலம், ஆரஞ்சு, பழுப்பு ஆகிய நிறங்களையும் பயன்படுத்தலாம். ஆனால், நல்ல வடிவமைப்பு இருந்தால்தான் எடுபடும். மேற்சொன்ன நிறங்களை மென்மையான, அழுத்தமான இயல்பில் பயன்படுத்துவதும் உண்டு. சிறந்த கொடி கிரேஸ்கேல் முறையிலும் தெளிவாக தெரியவேண்டும். மூன்று நிறங்கள் போதுமானது. அதற்கு மேல் உள்ள நிறங்கள் குழப்பத்தை ஏற்படுத்தும். அப்படியான நிறங்களை பயன்படுத்தி கொடிகளை உருவாக்குவது நடைமுறையில் செலவையும் அதிகரிக்கும். நெதர்லாந்தின் ஆம்ஸ்டெர்டாம் கொடியைப் பார்ப்போம். பின்னணியில் சிவப்புநிறம் உள்ளது. அதன்மேலே கருப்புநிறப்பட்டை. அதில் வெள்ளை நிற பெருக்கல் குறி. எளிதாக அடையாளம் காண முடிகிற இயல்பில் உள்ள கொடி. இதற்கு எதிர்மாறாக சைனீஸ் அட்மிரல் கொடி உள்ளது. ஐந்து நிறங்கள் கொண்டுள்ளதோடு இதில் இடதுபுறத்தில் இலச்சினை ஒன்று உள்ளது. நினைவுபடுத்திக்கொள்ள கடினமான கொடி. டொமினிய குடியரசு கொடி நீலம், சிவப்பு, வெள்ளை ஆகிய நிறங்களைக் கொண்டு...

ஒரு நாட்டின் கொடியை எப்படி வடிவமைக்க வேண்டும்? - மிஸ்டர் ரோனி

படம்
              அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி கொடியை எப்படி வடிவமைக்க வேண்டும்? அண்மையில் தமிழ்நாட்டில் நடிகர் ஒருவர் தொடங்கிய கட்சியின் கொடி சார்ந்து இப்படியான கேள்விகள் வருகிறதென நினைக்கிறேன். அடிப்படையில் கொடி என்பது முடிந்தவரை எளிமையாக இருக்கவேண்டும். அதாவது, ஒரு குழந்தை அக்கொடியை நினைவில் வைத்து நோட்டில் எழுதிக்காட்டவேண்டும். குழந்தைக்கே கொடி நினைவு வரவில்லையெனில் அந்த கொடியால் எந்த பயனும் இல்லை. கொடியில் ஒற்றை அடையாளம் இருக்கவேண்டும். சில நிறங்கள் போதும். எழுத்துகள் இருக்க கூடாது. மேலாக, கீழாக எப்படிப் பார்த்தாலும் புரிந்துகொள்ளும்படியாக இருக்கவேண்டும். சொந்த நாட்டுக்காரர்களுக்கே தேசியக்கொடி அடையாளம் தெரியவில்லையென்றால், அதை வடிவமைத்தவர் புகழ்பெற்ற வடிவமைப்பாளரான கதிர் ஆறுமுகமாக இருந்தாலும் கைவிட வேண்டியதுதான். அதுவே நாட்டுக்கோ, கட்சிக்கோ நல்லது. வங்கதேசத்தின் கொடியைப் பாருங்கள். அதில் பின்னணியில் கரும்பச்சை நிறம் இருக்கும். நடுவில் சிவப்பு நிறம் இருக்கும். சிவப்பு நிறம் என்பது எழுச்சி பெறுகிற சூரியனாக புரிந்துகொண்டால் சிறப்பு. இந்தக்கொடியை எளித...

தெரிஞ்சுக்கோ - மொழி, கொடி, மதம்

படம்
  தெரிஞ்சுக்கோ   - மொழி ஜிம்பாவே நாட்டில் பதினாறு அதிகாரப்பூர்வ மொழிகள் உள்ளன. ஒரு நாடு அங்கீகரித்துள்ள அதிகாரப்பூர்வ மொழிகளில் இதுவே அதிகம். இருபத்தொன்பது நாடுகளில் பிரெஞ்சு மொழி அதிகாரப்பூர்வ மொழியாக உள்ளது. உலகம் முழுக்க உள்ள எண்பது சதவீத பேசப்படும் மொழிகளை ஒரு லட்சத்திற்கும் குறைவான மக்களே பேசி வருகிறார்கள். உலக மக்கள்தொகையில் பாதிப்பேருக்கு இரு மொழிகளில்   எழுத, பேச தேர்ச்சி உண்டு. கத்தோலிக்க சர்ச்சின் தலைவர் போப் ஃபிரான்சிஸ் தனது செய்திகளை லத்தீன் உட்பட ஒன்பது மொழிகளில் மக்களுக்கு பகிர்கிறார். ஐ.நா அங்கீகரித்துள்ள ஆறு அதிகாரப்பூர்வ மொழிகள் இவைதான். அரபி, சீனம், ஆங்கிலம், பிரெஞ்சு, ரஷ்யன், ஸ்பானிய மொழி. விசில் ஒலிகளைக் கொண்டுள்ள மொழியை சில்போ என்று அழைக்கிறார்கள். கானரி தீவுகளில் உள்ள லா கோமெரா மக்கள்   ஐந்து கி.மீ. அளவில் விசில் ஒலியைக் கொண்டு தகவல் தொடர்பு கொள்கிறார்கள். 12.3 சதவீத மக்கள் சீனாவின் மாண்டரின் மொழியைப் பேசுகிறார்கள்.   கொடி பாரகுவே நாட்டின் தேசியக்கொடி ஓராண்டில் நான்கு முறை மாற்றப்பட்ட வரலாறு கொண்டது. 1811-1812 காலகட்டத...

நகரத்திலுள்ள பசுமை பரப்பு - வெர்டிகல் ஃபாரஸ்ட்

படம்
  கட்டடத்தில் காடு! இன்று காடுகளின் பரப்பு வெகுவாக குறைந்துவருகிறது. நகரங்களுக்குள் காடுகளை உருவாக்குவதற்கான இடம் குறைந்ததால், பசுமையை கட்டடங்களில் ஏற்றிவிட்டனர்.  பசுமை கட்டடங்கள் என்று கூறப்படும் கட்டடங்களில் பல்வேறு செடிகள், மரங்கள், கொடிகள் வளர்க்கப்படுகின்றன. இவை, வெர்டிகல் ஃபாரஸ்ட் என்று அழைக்கப்படுகின்றன.  இத்தாலியின் மிலனில், மரம், செடி கொடிகளை வளர்க்கும் கட்டடங்கள் பராமரிக்கப்படுகின்றன. இவை ஓரளவுக்கு நகரில் உள்ள கார்பன் டை ஆக்சைடை உறிஞ்சுகிறது.  ஒளிச்சேர்க்கை காரணமாகவே, மாசுபாட்டை அதிகரிக்கும் வாயுவை தாவரங்கள் பயன்படுத்திக்கொள்கின்றன.  நெதர்லாந்து நாட்டின் ரோட்டர்டாம்  நகரில் அலுமினிய டவர் ஒன்று உருவாக்கப்பட்டது. இது மக்கள் புழங்கும் பூங்காக்களில் வைக்கப்பட்டது. மாசுபாடுள்ள காற்றை இக்கருவி, சுத்திகரிக்கிறது. காபி தயாரிக்கும் இயந்திரத்தின் ஆற்றலைப் பயன்படுத்தி மாசுபாட்டு சுத்திகரிப்பு கருவி செயல்படுகிறது. தாவரங்களின் வளர்ச்சிக்கு  கார்பன் டை ஆக்சைடு  முக்கியமானது. நீர், சூரிய ஒளி ஆகியவற்றை கூடுதலாக பயன்படுத்தி ஒளிச்சேர்க்கை செய்து உணவு தயா...