இடுகைகள்

ஸ்டார்பக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஸ்டார்பக்ஸ் சீக்ரெட்ஸ்!

படம்
snopes.com ஸ்டார்பக்ஸ் சீக்ரெட்ஸ்! ஏறத்தாழ 2 லட்சத்து 77 ஆயிரம் ஊழியர்கள் கம்பெனியின் பங்குதார ர்களாக உள்ளனர். மொத்த கடைகளின் எண்ணிக்கை 24 ஆயிரம், உலகமெங்கும் உள்ள அக்கடையின் பிராண்ட் பெயர் ஸ்டார்பக்ஸ். அதேதான் தி.நகரின் பனகல் பஸ் ஸ்டாப்பைத் தாண்டி இடது புறம் சென்றால் இருக்கிறதே அதே கடையைத்தான் சொல்கிறோம். பார்ட்னர்ஸ் வாங்க! இங்குள்ள ஊழியர்கள் அனைவருக்கும் சம்பளம் உண்டு. கூடுதலாக நிறுவனம் ஓராண்டில் பெறும் லாபத்திலும் பங்குண்டு. எனவே இவர்களை நிறுவனம் பார்ட்னர்களாகவே கருதுகிறது. இதில் அமெரிக்க ஊழியர்களுக்கு ஆன்லைன் படிப்புகளை படிக்கவும் நிதி ஒதுக்குகிறது ஸ்டார்பக்ஸ். பச்சை நிறமே... வேலை செய்பவர்கள் சிவப்புநிறம் முதல் பச்சை நிறம் வரையிலான சின்ன டைனிங் ஜாக்கெட் போல அணிந்திருப்பார்கள். இது அவர்களின் சீனியர் தகுதியைக் குறிப்பது. கம்பெனியே காபி வறுப்பது முதல் அதனை ருசியாக்குவது வரையிலான பல்வேறு பயிற்சிகளை அளிக்கிறது. இதில் ஜாக்கெட்டில் பெயரை எம்ப்ராய்டரி செய்வது வரையிலான விஷயங்களையும் செய்கிறார்கள். அனைத்து இடத்திலும் உண்டா? என்றால் இல்லை. அமெரிக்காவில் கடைபிடிக்