இடுகைகள்

உரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடிதங்களை மேடையில் வாசிக்கும் பெருமை மிக்க நிகழ்ச்சி!

படம்
  கடிதங்களைப் படிப்போம் வாங்க! இங்கிலாந்தில் கடிதங்களைப் படிப்பதை பிரபலமான திரைப்பட, நாடக கலைஞர்கள் செய்கிறார்கள். இதை லெட்டர்ஸ் லைவ் என்ற நிகழ்ச்சியாக நடத்துகிறார்கள். இதில் பங்கேற்கும் பார்வையாளர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்திற்கும் அதிகம். கடிதங்களை நீங்கள் எப்படி தயாரிப்பீர்கள்? உங்களுக்கு நீங்களே எழுதுவதாக அல்லது பிறருக்கு எழுதியதை வைத்திருந்தால் கூட படிக்கலாம். யாரோ ஒருவருக்கு எழுத விரும்பியதைக் கூட எழுதி வந்து மேடையில் படிக்கலாம்.  இப்படி படிப்பதில் முக்கியமான விஷயம் இருக்கிறது. இங்கு வந்து கடிதங்களைப் படிக்க பெரிய முன்னேற்பாடுகள் எதையும் ஒருவர் செய்யவேண்டியதில்லை. கடிதங்களை எழுதிக்கொண்டு வந்து சத்தமாக படிக்க தெரிந்தால் போதும். ஆனால் இதற்கே பலரும் பதற்றப்படுகிறார்கள். ஏனெனில் திரைப்பட கலைஞர்களுக்கு இங்கு எப்படி முகத்தை உடலை வைத்துக்கொள்ளவேண்டும் என்று கூறுவதில்லை. எனவே, கடிதங்களை படிக்கும்போது ஏற்படு்ம் உணர்வுகளை ஒருவர் எளிதாக பிறருக்கு கடத்த முடியும். சுற்றியிருக்கும் பார்வையாளர்களும் கடிதத்தில் வெளிப்படும் உணர்ச்சிகளை கவனித்துக் கேட்கிறார்கள்.  நீங்கள் கடிதங்களை படிக்கும்போது, இன்

இந்தியாவின் பசுமைப்பரப்பை காக்க இந்திராகாந்தி எடுத்த நடவடிக்கைகளும், செயல்பாடுகளும்! - இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு

படம்
              இந்திராகாந்தி இயற்கையோடு இயைந்த வாழ்வு முடவன் குட்டி முகமது காலச்சுவடு மூல ஆசிரியர் - ஜெய்ராம் ரமேஷ் நூல் மொத்தம் 500 பக்கங்களைக் கொண்டது. அத்தனையிலும் நாம் அறிவது முழுக்க எதிர்மறையாக கூறப்படும் அரசியல் தலைவரைப் பற்றி.. இந்திரா பிரியதர்ஷினி எனும் நேருவின் மகளைப் பற்றியதுதான் நூல். நூலில் அவர் அதிகாரத்தில் இருந்தபோதும், இல்லாதபோதும் எப்படி சூழலியல் பற்றி கவனம் கொண்டிருந்தார், தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி தனக்கு பிடித்த விஷயங்களை செய்யாமல், மாநில முதல்வர்களுக்கு இயற்கை சூழலியல் பற்றி எடுத்துச்சொல்லி அவர்கள் மூலமாக நடவடிக்கை எடுக்க வைத்தது பற்றி நூலில் விரிவாக எடுத்துக் கூறப்பட்டுள்ளது. எமர்ஜென்சி நிலையை உருவாக்கியவர் என்று மட்டுமே இந்திராவை ஊடகங்கள் அடையாளப்படுத்தி அவரது பிற செயல்களை மறைத்துவிட்டனர். ஜெய்ராம் ரமேஷ் ஆங்கிலத்தில் எழுதிய இந்திரா பற்றிய இந்த நூல் சூழலியல் பல்வே்று ஆபத்துக்குள்ளாகி வரும் சூழலில் முக்கியத்துவம் பெறுகிறது. நூலில் இந்திரா எழுதிய பல்வேறு கடிதங்கள் இயற்கை அமைப்புகள், பம்பாய் இயற்கை வரலாற்று சங்கம், ஆவணக் காப்பகங்கள் ஆகிய இடங்களில் இருந்து பெறப்பட்டு

வரி கட்ட மக்கள் வாழ்ந்தாக வேண்டும்!

படம்
  அன்புக்குரிய மெகந்தியர்களே,  பெருந்தொற்று காலத்தில் உடனடியாக பொதுமுடக்கத்தை கொண்டு வந்தபோது மக்கள் மகிழ்வார்கள் என்று எதிர்பார்த்தேன். அப்போதுதான் மகாத்மா போலவே பலரும் நடக்க தொடங்கினார்கள். அதுவும் நல்லதுதான். அப்போதுதான் மக்கள் நாடெங்கும் உள்ள சாலைவசதிகளைப் பற்றி நன்றாக புரிந்துகொள்ள முடியும். இந்த நேரத்திலும் வெளிநாடுகளுக்காக ஆக்சிஜன் சப்ளை பற்றி நான் கவலைப்பட்டுக்கொண்டு இருந்தேன். அவர்களுக்கு சரியான நேரத்தில் பிராணவாயுவும், தடுப்பூசியும் கிடைக்காதபோது மெகந்தியர்களாகிய நாம் எப்படி மானமுடன் உயிர்வாழ முடியும்? நல்ல லாபத்திற்கு  ஆக்சிஜனை எனது நேசத்திற்குரிய நண்பர்கள் விற்றனர். இவற்றைப் பார்த்துக்கொண்டிருக்கும்போது, மக்கள் நடக்கிறார்களே என சிலர் விமர்சனங்களை கிளப்புகிறார்கள். அதை பொய்யாக்க இதோ ஆக்சிஜன் டேங்கர் ஓட்டும் மனேஷிடம் பேசலாம். மனேஷ் எப்படி இருக்கீங்க? உங்களின் ஆசிர்வாதத்தில் நல்லா இருக்கேன்யா உங்க குழந்தைகள் படிச்சுட்டு இருக்காங்களா? என்னோட மூணு பிள்ளைங்களும் படிச்சுட்டு இருக்காங்க ஐயா மூணு குழந்தைகளை வளர்க்கிற அளவுக்கு உங்களிடம் பணம் இருக்குதா? ஜினாக்ஸ் கம்பெனி எங்களை அக்கறைய

பிற நாட்டினரை காப்பதே நமது முதல் குறிக்கோள்!

படம்
  பெருந்தொற்றுக்கு எதிராக மக்களேதான் போராடி வெல்லவேண்டும்! எனது அன்புக்குரிய மெகந்தியா மக்களே,  பெருந்தொற்று வேகமாக பரவிவருகிறது. இதனை எதிர்க்க  அரசு நடத்திய யாகங்கள், பூஜைகளில் ஏராளமான மக்கள் கலந்துகொண்டது மகிழ்ச்சியளிக்கிறது. இப்படி நிகழ்ச்சிகள் நடந்து அதன்மூலம் நோய் பரவும் என  சமூகவிரோதிகள் கூறிவருவதை நான் கண்டிக்கிறேன். விரைவில் அவர்களை கண்டுபிடித்து மறு உலகிற்கு அனுப்ப உறுதிகொண்டுள்ளேன். மக்கள் தங்களுக்கு நோய் வந்தால் அதை அவர்களேதான் தீர்த்துக்கொள்ள வேண்டும். நமது முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் அல்ல. அவர்கள் காட்டிய வழியில்தான் கண்ணை மூடிக்கொண்டு நடந்து செல்கிறேன்.  எனக்கு நோய் தொற்றக்கூடாது என்பதற்காக பாதுகாப்பாக இருக்கும்போது டிவிதான் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதில் மருத்துவர்கள் பெருந்தொற்று ஏற்பட்டவர்களை கவனித்துக்கொள்வதை பார்த்தால் இவர்களுக்கு எப்படி இந்தளவு துணிச்சல் வந்தது என ஆச்சரியமாக உள்ளது.  இயற்கைப் பேரிடர்களான சுமான், ஜிசாப் ஆகிய புயல்களைக் கூட மக்களேதான்  எதிர்கொண்டனர். இடிந்துபோன வீடுகளை பின்னர் அவர்களேதான் கட்டிக்கொண்டனர். இதற்கு அரசு என்ன செய்யமுடியும்? இதற்கு