இடுகைகள்

மை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பச்சை குத்துதல், டாட்டூ வரைதலை நவீனமாக செய்யும் பழங்குடி மக்கள்!

படம்
  கோண்ட் பழங்குடிகள் கலைஞர் மங்களா பாய் ஒரு தொன்மை மொழி உள்ளது. அதை பேசும் மக்களில் ஒருவர் மிஞ்சினாலும் கூட அம்மொழி உயிரோடு இருக்கிறது என்றுதான் அர்த்தம். அப்படித்தான் பச்சை குத்துதலை நரிக்குறவர்கள் பல்லாண்டுகளாக செய்து வருகிறார்கள். முதலில் சைக்கிள் கம்பிகளை பச்சு குத்துவதற்கு ஏற்ப மாற்றியமைத்தவர்கள், இப்போது அதற்கென தனி கருவிகளை வாங்கிப் பயன்படுத்துகிறார்கள. இதற்கான மை தனித்துவமானது, பல்வேறு மூலிகைகளை கலந்து இதைச் செய்கிறார்கள். பழங்குடி மக்கள் இயற்கையான மையை பயன்படுத்துகிறார்கள். நகரங்களில் உள்ள டாட்டூ கலைஞர்கள் பெங்களூரு, கோவா ஆகிய பகுதிகளில் பச்சை குத்துவதற்கான செயற்கை மையை வாங்குகிறார்கள். இந்த மையை ஒருவர் பயன்படுத்தும்போது வரையப்படும் உருவங்கள் பச்சை நிறமாக மாறாது. தொன்மைக் காலத்தில் பச்சை குத்தியவர்களுக்கு, அந்த இடம் பச்சையாக மாறியது, மூலிகைகள் காரணமாகத்தான். பச்சை குத்துவதில் சுகாதாரம் முக்கியம். இதில் எளிதாக நோய்த்தொற்று பரவ வாய்ப்புள்ளது.   நாகலாந்து பழங்குடிகள் பச்சை குத்துவதற்கு புகழ்பெற்றவர்கள். இவர்கள், இயற்கை சார்ந்த விஷயங்களை கவிதை போல சொல்வதற்கு புகழ்பெற்றவர்கள்

காந்தியின் பேச்சால் ஊக்கம் பெற்று உருவான தற்சார்பு பேனா மற்றும் இங்க்!

படம்
  காந்தி தன் வாழ்நாளில் எழுதியுள்ள கடிதங்களின் எண்ணிக்கை எவ்வளவு தெரியுமா ? மொத்தம் 31 ஆயிரம் கடிதங்கள் . தினசரி உலக நாடுகளில் இருந்து வெளிவரும் கடிதங்களுக்கு பதில் அளிப்பது காந்தியின் வழக்கம் . அவர் வார நாட்களில் திங்கள்கிழமை மட்டும் மௌனவிரதம் இருப்பது வழக்கம் . ஆனால் வார நாட்களில் எப்போதும் எழுத்துக்கு விடுமுறை கிடையாது . இப்படி எழுதித்தான் நூறு நூல்களுக்கு மேல் காந்தி எழுதிய கட்டுரைகள் , பேச்சுகள் தொகுக்கப்பட்டு உள்ளன . இந்திய சுயராஜ்யம் பற்றி பேசிய காந்தி , இந்தியாவின் உள்நாட்டுத் தேவை போகவே பொருட்களை ஏற்றுமதி செய்யவேண்டும் என்று கூறிவந்தார் . இவரது கருத்தால் ஊக்கம் பெற்றவர்கள் தான் நாட்டின் தனித்துவமான பேனா மற்றும் பேனாவிற்கான மையைத் தயாரித்தனர் . காந்தியின் சுய ராஜ்ய கனவால் உந்தப்பட்டவர்களில் ஒருவர்தான் ராஜ முந்திரியைச் சேர்ந்த கே வி ரத்னம் . இவர் , 1921 ஆம் ஆண்டு காந்தியை சந்தித்து சுயராஜ்ய லட்சியப்படி என்ன பொருளை உருவாக்க வேண்டுமென கேட்டார் . அதற்கு , காந்தி பின் முதல் பேனா வரையில் நிறைய பொருட்களை நாம் தயாரிக்கலாமே என்று சொன்னார் . இதன்படி , 1932 ஆம் ஆண்டு ரத்னம் பென் வொர்க்ஸ்