இடுகைகள்

காணவில்லை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முப்பது ஆண்டுகளாக தேடப்படும் டீனேஜ் பெண்!

படம்
  தாரா காலிகோ நெடுஞ்சாலையில் காணாமல் போன டீனேஜ் பெண் – முப்பது ஆண்டுகளுக்கு மேலாக நீளும் தேடல் 1988 ஆம் ஆண்டு, செப்டம்பர் 20ஆம் தேதி. தாரா காலிகோ என்ற பெண்ணுக்கு வயது பத்தொன்பதாகியிருந்த்து. தன் அம்மாவின் சைக்கிளை எடுத்துக்கொண்டு வாக்மேன் பிளேயரை எடுத்துக்கொண்டு பாட்டு கேட்டபடியே வெளியே சென்றார். நியூ மெக்சிகோ பகுதியில் வாழ்ந்து வந்தவரான தாரா பிறகு சைக்கிளோடு வீட்டுக்கு திரும்பி வரவில்லை. இதோ   முப்பதாண்டுகளுக்கு மேலாகிவிட்டது. இன்னும் காவல்துறையினர் நம்பிக்கையை கைவிடவில்லை. குற்றவாளியை தேடிக்கொண்டே தான் இருக்கிறார்கள். தாரா சைக்கிளில் சென்று வந்த பகுதி பாலைவனத்தை ஒட்டிய நெடுஞ்சாலை. அவர் அடிக்கடி சைக்கிளில் முப்பதைந்து கி.மீ. தூரம் சென்று திரும்புவது வழக்கம். போகும்போது, ‘’நான் குறிப்பிட்ட நேரத்தில் வீட்டுக்கு திரும்பலைன்னா, சைக்கிளுக்கு ஏதோ பிரச்னைனு புரிஞ்சுக்கிட்டு என்னை கூட்டிக்கிட்டு போறதுக்கு வந்துடுங்க’’ என்று   கூறிவிட்டு சென்றிருக்கிறார். இதை அவரது சகோதரி சரியாக நினைவில் கொண்டிருக்கிறார். அதுதான் தாரா பேசிய கடைசி வார்த்தைகள். முப்பத்து நான்கு ஆண்டுகளுக்கு பிறகும் அவரைப்

அனாதைப் பிணத்தை வைத்து ஐஐடி மாணவர் ஆடும் பரமபத ஆட்டம்! - ஐஐடி கிருஷ்ணமூர்த்தி 2020

படம்
        ஐஐடி கிருஷ்ணமூர்த்தி   தனது சித்தப்பா காணவில்லை என கிருஷ்ணமூர்த்தி மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து நாளிதழில் விளம்பரம் கொடுக்கிறார் . அதைப் பார்த்து உதவி கமிஷனர் வினர் வர்மா , அவனை புகார் கொடுக்க அழைக்கிறார் . அவன் சொல்வது உண்மையா என அவருக்கு சந்தேகம் வருகிறது . உண்மையில் கிருஷ்ணமூர்த்தி யார் ? அவன் உண்மையில் தேடுவது அவன் சித்தப்பாவைத்தானா ? அவனது நோக்கம் என்ன என்பதை உதவி கமிஷனரோடு சேர்ந்து பார்வையாளர்களும் அறிவதுதான் படத்தின் மையப்பகுதி . படத்தில் மசாலா அம்சங்கள் ஏதுமில்லை . மைரோ தோஷி வரும் காட்சிகள் கூட இறுக்கமான கதையில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யவேண்டுமே என்பதுதான் .    படத்தின் நாயகன் நல்ல ஓங்குதாங்கான உடல்கட்டோடு இருக்கிறார் . இதனால் படத்தில் சண்டைக்காட்சிகள் இருக்கலாமே என தோன்றுகிறது . ஆனால் படத்தில் அதற்கான தேவைகள் மிகவும் குறைவு . ஒரேயொரு சண்டைக்காட்சி மட்டுமே உள்ளது . பள்ளியொன்றை நடத்தி வரும் ஶ்னிவாசன் என்பவரின் மீது சுமத்தப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டும் அதைப்பற்றிய சர்ச்சைகளும்தான் பின்பாதி கதையை நகர்த்த உதவுகிறது . உண்மையில் ஶ்னிவாசன்