அனாதைப் பிணத்தை வைத்து ஐஐடி மாணவர் ஆடும் பரமபத ஆட்டம்! - ஐஐடி கிருஷ்ணமூர்த்தி 2020
ஐஐடி கிருஷ்ணமூர்த்தி
தனது சித்தப்பா காணவில்லை என கிருஷ்ணமூர்த்தி மும்பையிலிருந்து சென்னைக்கு வந்து நாளிதழில் விளம்பரம் கொடுக்கிறார். அதைப் பார்த்து உதவி கமிஷனர் வினர் வர்மா, அவனை புகார் கொடுக்க அழைக்கிறார். அவன் சொல்வது உண்மையா என அவருக்கு சந்தேகம் வருகிறது. உண்மையில் கிருஷ்ணமூர்த்தி யார்? அவன் உண்மையில் தேடுவது அவன் சித்தப்பாவைத்தானா? அவனது நோக்கம் என்ன என்பதை உதவி கமிஷனரோடு சேர்ந்து பார்வையாளர்களும் அறிவதுதான் படத்தின் மையப்பகுதி.
படத்தில் மசாலா அம்சங்கள் ஏதுமில்லை. மைரோ தோஷி வரும் காட்சிகள் கூட இறுக்கமான கதையில் கொஞ்சம் ரிலாக்ஸ் செய்யவேண்டுமே என்பதுதான்.
படத்தின் நாயகன் நல்ல ஓங்குதாங்கான உடல்கட்டோடு இருக்கிறார். இதனால் படத்தில் சண்டைக்காட்சிகள் இருக்கலாமே என தோன்றுகிறது. ஆனால் படத்தில் அதற்கான தேவைகள் மிகவும் குறைவு. ஒரேயொரு சண்டைக்காட்சி மட்டுமே உள்ளது.
பள்ளியொன்றை நடத்தி வரும் ஶ்னிவாசன் என்பவரின் மீது சுமத்தப்படும் நிதி மோசடி குற்றச்சாட்டும் அதைப்பற்றிய சர்ச்சைகளும்தான் பின்பாதி கதையை நகர்த்த உதவுகிறது. உண்மையில் ஶ்னிவாசன் யார், அவர் மீது எதற்கு பழிபோடப்படுகிறது, சிறையில் இருப்பவரை யாரும் மீட்க முயலவில்லையா என பல்வேறு கேள்விகளுக்கு பதில் தேடுகிறது பிற்பாதி படம்.
சத்யாவின் காமெடி தொடக்கத்தில் கொஞ்சம் ரிலாக்ஸ் தருவதாக உள்ளது. மற்றபடி கதையில் அவரது பங்கு ஏதுமில்லை. வினய் வர்மா, நேர்மையான என்பதை விட ஈகோ கூடுதலாக உள்ள உதவி கமிஷனராக நடித்துள்ளார். இவருக்கு வரும் போன் அழைப்பு வழக்கு விசாரணையை மாற்றுகிறது. உளவியல்ரீதியாக ஆடிட்டருக்கு கொடுக்கும் போலீஸ் டார்ச்சர்கள் புதுசு. விசாரிக்கும்போது சொல்லும் கதை தனி மிரட்டல். ரத்தம், சத்தம் அதிகம் இல்லாத திரில்லர் படம் என்பதால் சிலருக்கு படம் திருப்தி இல்லாமல் இருக்கலாம். நிதி மோசடி சார்ந்த படங்களில் ரத்தம் அதிகம் இருக்காது.
திரில்லருக்கு கேரண்டி!
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக