மரபணு மாற்றப்பட்ட பொருட்கள் உடலுக்கு ஆபத்தானவையா? உண்மையும் உடான்ஸூம்

 

 

 

 

என்னதான் பிரபலம் காமெடியன்னாலும் ஒரு நாளைக்கு ஒரு கோடியா சம்பளம் ...

 

 

உண்மையும் உடான்சும்!

பசு, தன்னுடைய குரல் மூலம் கன்றுகளை தொடர்புகொள்கிறது

ரியல்: உண்மைதான். எப்படி விலங்குகளின் வால் அசைவுகளுக்கு பொருள் உள்ளதோ, அதேபோல பசுவின் குரலுக்கும் பொருள் உண்டு. பசுக்களை பராமரிப்பவர்கள் பசு எழுப்பும் ஒலியை வைத்தே அதன் தேவை என்னவென்று உணர்வார்கள். இது அனுபவத்தால் ஏற்படுவது. 2014ஆம் ஆண்டு லண்டனைச்சேர்ந்த ராணிமேரி பல்கலைக்கழகம், நார்த்திங்டன் பல்கலைக்கழகம் செய்த பத்து மாத ஆய்வில் பசுவின் குரலுக்கு பல்வேறு அர்த்தம் உண்டு என கண்டறிந்தனர்.

மாலைவேளையில் உடலின் ஆற்றல் குறையும்

ரியல்: உடலிலுள்ள உயிரியல் கடிகாரத்தின் (Circadian Rhythm) இயக்கத்தைப் பொறுத்தே இந்நிலை அமையும். இதனை மூளையிலுள்ள சுப்ராஸ்மேடிக் நியூக்ளியஸ் (SCN) எனும் பகுதி கட்டுப்படுத்துகிறது. இதன் காரணமாக மதிய உணவை நீங்கள் சாப்பிட்ட பிறகு 2-4 மணிக்குள் தூக்கம் உங்களை சொக்க வைக்கிறது. தூக்கத்திற்கு மூலமான மெலடோனின் சுரப்பு உடலில் சுரப்பதே இதற்கு காரணம். உயிரியல் கடிகாரத்தின் இயல்போடு, அதிக மாவுச்சத்து சேர்ந்த உணவுகள், இரவில் போதிய தூக்கமின்மை ஆகியவையும் மாலையில் உடலின் ஆற்றலை பலவீனமாக்குகின்றன. இரவில் குறைந்தபட்சம் ஆறு மணிநேரம் உறங்குவது அவசியம். சரியான தூக்கம் கிடைத்தால், உடல் மாலைவேளையில் சோர்ந்துபோகாது.

பதப்படுத்தப்பட்ட பொருட்கள் ஆரோக்கியமானவை அல்ல

ரியல்: குறிப்பிட்ட பதப்படுத்தப்பட்ட பொருட்களில் சர்க்கரை, உப்பு, கொழுப்பு அதிகம் இருப்பதால் இப்படி கூறுகிறார்கள். இது உண்மை அல்ல. குறைவான முறை பதப்படுத்தப்பட்ட பொருட்கள் உடலுக்கு நன்மை தருகின்றன. உதாரணமாக பால், வெப்பம் மூலம் பதப்படுத்தப்பட்டு பாக்டீரியா நீக்கப்படுகிறது. காய்கறிகள், பழங்களை பதப்படுத்தி பயன்படுத்தலாம். குளிர்பானங்கள், கேக், சுவையூட்டப்பட்ட யோகர்ட் ஆகியவை அதிகமுறை பதப்படுத்தல் செயல்முறையில் ஈடுபடுத்தப்படுகின்றன. இவற்றை குறைவான அளவில் நீங்கள் சாப்பிடலாம். தவறு இல்லை.

மரபணு மாற்றப்பட்ட உணவுகள் உடலுக்கு ஆபத்தானவை

ரியல்: சில உணவு வல்லுநர்கள். இயற்கை விவசாயிகள் இப்படி எதிர்மறை பிரசாரத்தை செய்து வருகின்றனர். இது உண்மையல்ல. பூச்சிகள் தாக்காத, உலக மக்களுக்குத் தேவையான உணவுகளை மரபணுமாற்ற நொழில்நுட்பம் மூலம் உறபத்தி செய்யமுடியும். சோளம், பருத்தி, சோயாபீன்ஸ், கடுகு ஆகிய பயிர்களை மரபணுமாற்ற முறையில் விளைவித்து சந்தைப்படுத்தி வருகின்றனர். சர்வதேச உணவு தரக்கட்டுப்பாட்டு நிறுவனங்களின் பரிந்துரைகளை ஏற்றுதான் மரபணு மாற்றப்பயிர்கள் விளைவிக்கப்பட்டு வருகின்றன. தனிப்பட்ட சிலருக்கு மட்டும் ஒவ்வாமை பிரச்னை ஏற்பட்டுள்ளது. மற்றபடி பலரின் உடலும் மரபணுமாற்ற உணவை ஏற்றுக்கொண்டுளன.

வீடுகளில் உள்ளவர்களை இடி, மின்னல் தாக்காது

ரியல்: வெட்டவெளியில், மரங்களுக்கு கீழே இருப்பதை விட வீட்டில் இருப்பது பாதுகாப்பானதுதான். ஆனால் வீட்டிலுள்ள மின்சாதனங்களை மின் இணைப்பிலிருந்து துண்டித்து வைத்திருக்கவேண்டும். இடி, மின்னலின் போது, அவற்றைப் பயன்படுத்தாமல் இருப்பது பொருட்களுக்கும். நமக்கும் நல்லது. ஜன்னல்கள் வழியாக மின்னல் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன என்பதால் இதனை இடைவெளியின்றி மூடிவைப்பது அவசியம். சுவர்களில் விரிசல்கள் இல்லாத வீடுகள், கட்டடங்கள் பாதகாப்பானவையே


கருத்துகள்