நியூராலிங்க் சிப் மூலம் கணினியையும் மூளையையும் இணைக்க முடியுமா?

 

 

 

 

நியூராலிங்க்: மனித மூளையில் சிப் வைக்கும் எலான் மஸ்க்கின் திட்டத்தில் ...

 

 

 


நியூராலிங்க் 'சிப்' !


நவீன தொழிலதிபர் எலன் மஸ்க்கின் நிறுவனம், நியூராலிங்க். இந்த நிறுவனம், ஒருவரின் தலையில் சிப் பொருத்தி அவரின் மூளையிலுள்ள குறைபாடுகளைக் கண்டறிந்து தீர்க்க முயலுகிறது. சிப் மூலம் மூளையில் நடக்கும் பல்வேறு தகவல் தொடர்புகளை கண்காணித்து அவற்றை முழுமையாக அறிவது, இந்த நிறுவனத்தின் முக்கியமான நோக்கம் ஆகும்.


ஐடியா, ஆங்கில அறிவியல் திரைப்படம் போல இருந்தாலும் சாத்தியம் என அடித்துச் சொல்கிறார் நிறுவனத்தின் இயக்குநர் எலன் மஸ்க். மூளையில் 3,072 மின்முனைகளை தலைமுடியை விட மெல்லிய வயர்களில் பிணைத்து மூளையில் நியூரான்களில் நடக்கும் தகவல்தொடர்புகளை நாம் பெறுவதுதான் இதில் முக்கியமான கட்டம். இதனை லிங்க் என்று குறிப்பிடுகின்றனர். மூளையில் நடைபெறும் தகவல்தொடர்பை அறி்வதன் மூலம், மூளையின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் பணிகளை துல்லியமாக அறியமுடியும். தற்போது வயர்கள் இருந்தாலும், எதிர்காலத்தில் வயர்லெஸ் முறையில் இந்த அமைப்பு செயல்படும் என நியூராலிங்க் நிறுவனம் நம்பிக்கையுடன் செயல்பட்டு வருகிறது.


மூளையில் மிக சிக்கலான அறுவை சிகிச்சை என்பதால் இதனை ரோபோ மட்டுமே சரியாக செய்யமுடியும் என்று கூறுகிறது இந்நிறுவனம். இரண்டு மணிநேர அறுவை சிகிச்சையில் மண்டையோட்டை துளையிட்டு சிப்புடன் மெல்லிய வயர்கள் பொருத்தப்படுகின்றன. உடல் பாகங்கள் செயலிழந்தவர்களுக்கு உதவுவதே இந்த ஆராய்ச்சியின் முக்கிய நோக்கம். அவர்கள் தாங்கள் என்ன செய்யவேண்டும் என நினைத்தாலும் அதனை நியூராலிங்கின் ஆராய்ச்சி மூலம் செய்யமுடியும். வயர்லெஸ் கீபோர்ட்டை இயக்குவது, ஐஓஎஸ் கருவியை செயல்படுத்துவது என சில அம்சங்களைக் கூறலாம்.

தகவல்

Web user


Neuralink

david crookes








கருத்துகள்

பிரபலமான இடுகைகள்