ஷாவோலின் கோவில் பண்பாட்டை இந்தியாவில் பரப்ப ஆர்வமாக உள்ளோம்!- ஷி யோங்ஷின், ஷாவோலின் கோவில்
ஷி யோங்ஷின்
ஷாவோலின் கோவில் சீனா
இந்தியாவில் உள்ள தற்காப்புக்கலையின் மற்றொரு பிரதிதான் சீனாவில் தற்போது கற்றுத்தரும் குங்க்பூ என நினைக்கிறீர்களா?
நான் இந்த கோட்பாட்டை நம்பவில்லை. ஷாவோலின் குங்க்பூ என்பது போதிதர்மாவை தனியாக உள்ளடக்கியது அல்ல. சீனாவில் தற்காப்புக்கலைக்கென தனி பாரம்பரியம் உள்ளது. இது இந்தியாவில் பயிலப்படும் தற்காப்புக்கலைகளிலிருந்து மாறுபட்டது. எங்கள் குங்க்பூ பல்வேறு ஆண்டுகளாக பரிணாம வளர்ச்சி பெற்று மாறுபட்டு வருகிறது.
பல்வேறு நாட்டு தலைவர்களும் ஷாவோலின் கோவிலை பார்வையிட்டுள்ளனர். இந்திய பிரதமர் மோடி இதனை பார்வையிடவேண்டும் என விரும்புகிறீரகளா?
நாங்கள் இந்திய அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி போதிதர்மா பற்றியும், அங்குள்ள புத்த நடைமுறைகளை அறியவும் விரும்புகிறோம். உங்கள் பிரதமர் ஆற்றல் வாய்ந்தவராக உள்ளார். அவர் புத்தம் பற்றியு்ம் அறிவு கொண்டவராக உள்ளார். அவர் எங்கள் கோவிலுக்கு வருகை தருவதோடு இந்தியாவிலும் எங்கள் வளர்ச்சிக்கு உதவுவார் என நினைக்கிறேன்.
கோவிலில் மாணவர்களுக்கு என்ன சொல்லித் தருகிறீர்கள்?
நாங்கள் மாணவர்களுக்கு ஷாவோலின் குங்க்பூ மற்றும் தியானம் சொல்லித் தருகிறோம். உடல்ரீதியாகவும் ஆன்மிக ரீதியாகவும் நாங்கள் அவர்களுக்கு பல்வேறு பயிற்சிகளை வழங்குகிறோம். ஜென் மூலம் அவர்கள் தங்கள் உடலைப் பராமரிப்பது பற்றி சொல்லிக் கொடுக்கிறோம். நாங்கள் துறவிகளுக்கான பல்வேறு பயிற்சிகளை மாற்றிவிட்டாலும் எங்கள் பண்பாட்டில் மாற்றம் செய்யவில்லை.
உங்களுக்கு இந்தியா எப்படி முக்கியமானதாகிறது. அங்கு போதிதர்மர் பிறந்த இடத்தில் கோவில் கட்டும் எண்ணமுள்ளதா?
இந்தியா எங்களுக்கு எப்போதும் முக்கியமான இடம்தான். போதிதர்மர் பற்றி பல்வேறு பார்வைகள் அங்கு நிலவுகின்றன. நான் இரண்டுமுறை இந்தியாவுக்கு சென்றுள்ளேன். 1996ஆம்ஆண்டு நான் இந்தியாவுக்கு சென்றபோது அங்குள்ள புத்த கோவில்கள் சிறப்பாக பராமரிக்கப்பட்டு வருவதைக் கண்டேன். சீனர்கள் மட்டுமல்ல ஜப்பானியர்கள், கொரியர்கள் கூட இந்தியாவுக்கு வந்து செல்கின்றனர். அவர்கள் போதிதர்மரைப் பற்றி அறியவே அங்கு வருகின்றனர். எங்களுக்கு அவர் பிறந்த இடம் பற்றி தெளிவாக தெரியவில்லை.
ஷாவோலின் கோவில் பண்பாடு பற்றி பிரசாரம் செய்வது எதற்காக?
துறவி என்பதால் நாங்கள் உலகிடமிருந்து தனித்து இருக்கமுடியாது. 1500 ஆண்டுகள் கலாசாரம் கொண்டது ஷாவோலின் கோவில். நாங்கள் குங்க்பூ வழியாக மனிதர்களின் வாழ்க்கை மேம்பட உதவுகிறோம். எங்கள் பண்பாடு உலகில் மூலை முடுக்கெங்கும் பரவ வேண்டும் என நினைக்கிறோம். எங்களைப் பற்றி தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு இதன்மூலம் உதவ நினைக்கிறோம்.
தி வீக்
அனிருதா கரிண்டாலம்
கருத்துகள்
கருத்துரையிடுக