நிறுவனத்தை குடும்பத்தினர் நடத்துவதை விட தகுதியுள்ளவர்கள் நடத்தவேண்டும்! - சுனில் பார்தி மிட்டல், ஏர்டெல்
சுனில்பார்தி மிட்டல்!
ஏர்டெல்
நீங்கள் டெலிகாம் சார்ந்து மட்டும்தான் செயல்படுகிறார்கள். பிற நிறுவனங்கள் போல பல்வேறு சேவைகளை வழங்கும் எண்ணம் இல்லையா?
பிற நிறுவனங்கள் வழங்காத பல்வேறு சேவைகளை ஏர்டெல் வழங்குகிறது. நாங்கள் அமேசான், நெட்பிளிக்ஸ், ஜீ5 நிறுவனங்களுடன் இணைந்து பல்வேறு சேவைகளை வழங்குகிறோம். எங்களிடம் ஒரிஜினல் நிகழ்ச்சிகள் கிடையாது. பெரிய ஸ்டூடியோ கிடையாது என்பது உண்மைதான். ஒருமுறை ஏடிஅண்ட்டி டைம் வார்னர் நிறுவனங்கள் இணைந்தபோது, அதன் இயக்குநரிடம் பேசினேன். எதிர்காலத்தில் ஸ்மார்ட்போன்கள் வரப்போகின்றன. அப்போது நிகழ்ச்சிகளை வழங்குவதற்கு நிறுவனம் தேவை என்று கூறினார். இப்படி நிறுவனங்களை இணைத்துக்கொண்டு செயல்படுவது பல்வேறு சவால்களைக் கொண்டுள்ளது. ஆனால் அந்நிறுவனம் இன்றுவரை வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது.
ரிலையன்ஸ் நிறுவனம் 2ஜி தேவையில்லை என்று கூறிவருகிறதே?
நாங்கள் இப்போது 3ஜி விவகாரத்தில் உள்ளோம். மெல்ல மக்களும் 4ஜி சிம் கார்டுகளை வாங்கிவருகிறார்கள். 2ஜியிலிருந்து மக்கள் இப்போதுதான் 4ஜிக்கு மாறுகிறார்கள். 3 ஆண்டுகளில் மக்கள் பெரும்பாலும் 4ஜிக்கு மாறிவிடுவார்கள்.
சீனாவிலிருந்து பெறும் 5 ஜி பொருட்களுக்கு தடை என்று அரசு கூறியுள்ளது. நீங்கள் இதனை எப்படி பார்க்கிறீர்கள்?
சீனாவை வெளியேற்றிவிட்டால் சந்தையில் சாம்சங், நோக்கியா ஆகிய நிறுவனங்கள் மட்டுமே இருக்கும். 5 ஜி பொருட்களின் விலையில் மாற்றங்கள் இருக்கும். இத்துறையில் ஐபிஎம், சிஸ்கோ போன்ற நிறைய தயாரிப்பாளர்கள் இருக்கவேண்டும். நாம் இந்த வகையில் மேற்குநாடுகளின் வழியில் யோசிக்கவேண்டும்.
கால்டிராப் பற்றி நாம் பேசியே ஆகவேண்டும்?
முன்னர் இதுபோல நிகழ்ச்சிகள் நடைபெற்றன என்பது உண்மைதான். ஆனால் இப்போது 99.9 சதவீதம் ஸ்மார்ட்போன்கள் வந்துவிட்டன. இவற்றில் கால் டிராப் நடைபெறுவது பெருமளவில் குறைந்துவிட்டது.
ரிலையன்ஸ் நிறுவனம் செல்போன்களையும் சிம்மையும் விற்று வருகிறதேழ
அந்நிறுவனம் பல்வேறு வணிகங்களை செய்கிறது. ரீடெய்ல், டெலிகாம், இவணிக தளங்கள் இவற்றில் உண்டு. நாங்கள் கூகுள், அமேசான் ஆகிய நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துகொண்டு செயல்பட்டு வருகிறோம்.
பட்ஜெட் எப்படி இருக்கவேண்டும் என்ற நினைக்கிறீர்கள்?
இப்போதைக்கு வரிவருவாய் சலுகையை அரசிடம் எதிர்பார்க்க முடியாது. பல்லாயிரம் பேர் வேலைகளை இழந்துள்ளதால் அது தொடர்பாக அரசிடம் திட்டங்களை எதிர்பார்க்கலாம். சிறுகுறு தொழிற்சாலைகளுக்கு அரசு உதவிபுரியவேண்டியது அவசியம். எனவே அரசு அடிப்படை கட்டமைப்புகளுக்கு அதிக பணத்தை செலவழிக்க வேண்டியது அவசியம்.
நீங்கள் சிங்டெல் நிறுவனத்திடம் உரிமைகளைக் கொடுத்துவிட்டதாகவும் வணிகத்திலிருந்து வெளியேறப்போவதாகவும் கூறுகிறார்கள்ழ
அவர்கள் என்னிடம் அப்படி ஒரு கோரிக்கையை முன்வைக்கவில்லை. நாங்கள் இருபது ஆண்டுகளாக கூட்டாளிகளாக பணியாற்றிவருகிறோம். நாங்கள் நடத்துவதைப் போல அவர்களால் நடத்தமுடியது என்று அவர்களே கூறியிருக்கிறார்கள். பொதுச்சந்தையில் பட்டிலிடப்பட்ட நிறுவனம் ஏர்டெல். எங்கள் குடும்ப உறுப்பினர்கள் பங்குகளைக்
கொண்டிருப்பார்கள்.
உங்கள் நிறுவனத்தை உங்களது மகன் நிர்வாகம் செய்வதை நீங்கள் விரும்பவில்லையா?
இந்தியாவில் பல்வேறு நிறுவனங்களை குடும்பத்தினர், நண்பர்கள் சேர்ந்து நடத்துவார்கள். ஆனால் ஏர்டெல்லை நாங்கள் அப்படி உருவாக்கவில்லை. தகுதியுள்ளவர்கள் மட்டுமே இங்கே போர்டில் இருப்பார்கள். நிறுவனத்தை தலைவராக, இயக்குநராக வழிநடத்துவார்கள். எனது மகன் திறமையின்றி போர்டில் உறுப்பினராவதை நான் விரும்பவில்லை. அப்படித்தான் எங்கள் நிறுவனம் இயங்குகிறது.
வருவாயை பெருக்க என்ன செய்கிறீர்கள்?
நாங்கள் வாடிக்கையாளர்களிடம் செல்கிறோம். குறைந்தபட்சம் ரூ.35ஐ நாங்கள் ஏர்டெல் கட்டணமாக பதிவு செய்துள்ளோம். தரமான சேவையை அவர்களுக்கு அளிப்பதில் முன்னுரிமை கொடுக்கிறோம்.
அடுத்தது என்ன?
என்னுடைய 45 வயதில் எனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் இருந்த்து. 49 வயதில் அதைத்தாண்டிய தாக்கம் ஏற்படுத்தும் ஒன்றை செய்யத்தோன்றியது. பொதுமக்களுக்கான சேவை என்பது எனக்கு ஆர்வமூட்டுகிற ஒன்று. ஏர்டெல்லின் தலைமை என்பது எனக்கு வேறு வாய்ப்பில்லாமல் ஏற்றுக்கொண்டதுதான். நான் அதிகம் படித்த பொறியாளரோ, மருத்துவரோ அல்ல. எனவே டெலிகாம் துறையை தேர்ந்தெடுத்தேன்.
பிசினஸ் டுடே
கருத்துகள்
கருத்துரையிடுக