இடுகைகள்

காஃபீன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஒரு கப் தேநீரில் என்ன இருக்கிறது என தெரியுமா?

படம்
  உலகம் முழுக்க பல கோடி மக்களால் பருகப்படும் பானம் தேநீர். பிரிட்டிஷார் காலத்தில் அதிகம் பயிரிடப்பட்ட பணப்பயிர், இன்றளவும் முக்கியமான ஏற்றுமதிப் பொருளாக உள்ளது. பொதுவாக மக்கள் டஸ்ட் டீயை குடித்து வந்தாலும், இதில் ஆறு வகைகள் உள்ளன. கருப்பு, மஞ்சள், பச்சை, வெள்ளை, ஊலாங், பு RCH  என ஆறு வகைகள் இன்று சந்தையில் உள்ளன. சூப்பர் மார்க்கெட்டுகளில் இவற்றை நீங்கள் வாங்கிக்கொள்ள முடியும். இல்லையெனில் அரசு கடைகளான டேட்டீ கிளைகளில் பல்வேறு வகை டீ வகைகள் கிடைக்கின்றன. காபியை விட டீயில் காஃபீன் அளவு அதிகம். ஆனால் தேயிலையை தூளாக மாற்றும் பல்வேறு படிநிலைகளில் காஃபீன் அளவு குறைந்துவிடுகிறது. ஒரு கப் டீயில் 50 மி.கி. காஃபீன் உள்ளது. அதேயளவு காபியில் 175 மி.கி. காஃபீன் உள்ளது. காரணம் தேயிலைக்கும், காபி கொட்டைகளுக்கும் உள்ள வேறுபாடுதான். இதனால்தான் டீயை விட்டுத்தர முடிந்தவர்கள் அதிகம் பேர் உள்ளனர். ஆனால் காபியை பலரும் விட்டுத்தர முடியாமல் அடிமையாக மாறக் காரணம் அதிலுள்ள காஃபீன்தான். இன்று டீயிலும் கூட பல்வேறு கலப்படங்கள் வந்துவிட்டன. டீ, காபி இயல்பாகவே உடலை ஊக்கமூட்டும் தன்மை கொண்டது.

சாக்லெட்டின் சுவை எங்கிருந்து வருகிறது?

படம்
mirror சாக்லெட்டுகளின் கதை முதன்முதலில் சாக்லெட்டுகள் இப்போது இருப்பது போல பாராக, சிறியவையாக கெட்டியான பொருளாக கிடைக்கவில்லை. மத்திய அமெரிக்காவில் கசப்பு பானமாக கண்டறியப்பட்டது. ஐரோப்பாவின் சந்தைக்கு வந்தபோது அதில் சர்க்கரை சேர்த்து பருகி வந்தனர். பின்னர் சாக்லெட்டை பதப்படுத்தி அதனை இன்றைக்குப் பார்க்கும் காட்பரீஸ், அமுல் டார்க் சாக்லெட் கொண்டு வந்துள்ளனர். சாக்லெட் தயாரிப்பு என்பது ஏறக்குறைய திராட்சையைப் பறித்துப் போட்டு பக்குவப்படுத்துகிறார்களே அதைப் போன்றதுதான். காபி பீன்ஸ்களை மெல்ல பதப்படுத்தி சாக்லெட்டைத் தயாரிக்கிறார்கள். சாக்லெட் என்றால் முழுமையாக சாக்லெட் மட்டுமே இருப்பதில்லை. சாக்லெட்டுடன் சர்க்கரை, பால் பொருட்கள், வாசனையூட்டும் பொருட்கள் ஆகியவற்றை கலக்குகின்றனர். வெள்ளை சாக்லெட்டில் பால் பொருட்களோடு கோகோ பட்டர் மட்டுமே இருக்கும். சாக்லெட்டில் குறைந்தளவு காஃபீன் காணப்படுகிறது. கூடவே ஊக்கமூட்டியான தியோபுரோமைன் எனும் வேதிப்பொருளும் உள்ளது. உலகளவில் சுவிட்சர்லாந்து நாட்டுக்காரர்கள் 9 கி.கி சாக்லெட்டை ஆண்டுக்கு தின்று வருகிறார்கள். இன்று சாக்லெட் த

வெறும் வயிற்றில் காபி குடித்தால் செரிமானம் பாதிக்கப்படுமா?

படம்
giphy மிஸ்டர் ரோனி காபியை வெறும் வயிற்றில் குடிக்கலாமா? நெஸ்லே சன்ரைஸ், ப்ரூ இன்று பலரின் காலை நேரங்கள் விடிவதில்லை. ஆனால் இது சரிதானா? தண்ணீருக்கு அடுத்து அதிகப்படியாக உலகமெங்கும் பருகப்படுவது காபிதான். இதற்கு சாதகமான ஆராய்ச்சிகள் உலகமெங்கும் உண்டு. எப்படி கோலா பானங்களில் பாதிப்பில்லை என்று சொல்கிறார்களோ அதேபோல காபியையும் சொல்வதுண்டு. வெறும் வயிற்றில் காபியை குடித்தால் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகரிக்கும். அதுவும் கூட தற்காலிகமாகத்தான். பின்னர் தொடர்ந்து நீங்கள் காபியை வெறித்தனமாக காலையில் குடித்து வந்தால், இதன் அளவு குறைந்துவிடும், காஃபீன் அளவு தினசரி 400 மி.கி அளவுக்கு குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது. எதற்கு தெரியுமா? அப்போதுதான் காபிக்கு நீங்கள் அடிமையாக இல்லாமல் இருப்பீர்கள். இதன்விளைவாக காபியை குடித்தே ஆகவேண்டும் என்ற நிலை வராது. காபி குடித்தால் எந்த விளைவும் ஏற்படாமல் இருந்தால் எப்படி? பதற்றம், கழிச்சல், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதற்கு பதிலாகத்தான் தூக்கம் வராமல் சக்திமானாக உட்கார்ந்து வேலை செய்வதற்கான சக்தியை காபி வழங்குகிறது. வெறும்

ரத்தத்தில் காஃபீன் எவ்வளவு நேரம் இருக்கும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி  காபி, கோலா ஆகியவற்றிலுள்ள காஃபீன் நம் உடலில் எவ்வளவு நேரம் ஆக்டிவாக இருக்கும்? லியோ காபியில் சுரத்தே இல்லாத காபியை ஆஹா பேஷ் பேஷ் என சொல்லி குடித்தால் பிரமாதமாக காலை விடியும். குடித்தவுடனே ரத்தத்தில் 45 நிமிடங்கள் கழித்து வித்தியாசத்தை உணர்வீர்கள். ஆனால் இதே காஃபீனை மாத்திரையாக எடுத்துக்கொண்டீர்கள் என்றால், காஃபீன் ரத்தத்தில் பரவ 60 அல்லது 75 நிமிடங்கள் ஆகும். ஆறுமணிநேரங்களுக்குப் பிறகு காபீன் அளவு பாதியாக குறைந்துவிடும் என்பதே உண்மை. இதன் அர்த்தம், மாலை ஏழுமணிக்கு மாமி மெஸ்ஸில் காபி குடித்தால், இரவு பதினொரு மணிக்கு படுக்கும்போதும் ரத்தத்தில் காபீன் அழுத்தம் இருக்கும். நன்றி: பிபிசி படம் -டெம்போ இங்க்லீஸ்