வெறும் வயிற்றில் காபி குடித்தால் செரிமானம் பாதிக்கப்படுமா?
giphy |
மிஸ்டர் ரோனி
காபியை வெறும் வயிற்றில் குடிக்கலாமா?
நெஸ்லே சன்ரைஸ், ப்ரூ இன்று பலரின் காலை நேரங்கள் விடிவதில்லை. ஆனால் இது சரிதானா? தண்ணீருக்கு அடுத்து அதிகப்படியாக உலகமெங்கும் பருகப்படுவது காபிதான். இதற்கு சாதகமான ஆராய்ச்சிகள் உலகமெங்கும் உண்டு. எப்படி கோலா பானங்களில் பாதிப்பில்லை என்று சொல்கிறார்களோ அதேபோல காபியையும் சொல்வதுண்டு.
வெறும் வயிற்றில் காபியை குடித்தால் மன அழுத்த ஹார்மோனான கார்டிசோல் அதிகரிக்கும். அதுவும் கூட தற்காலிகமாகத்தான். பின்னர் தொடர்ந்து நீங்கள் காபியை வெறித்தனமாக காலையில் குடித்து வந்தால், இதன் அளவு குறைந்துவிடும், காஃபீன் அளவு தினசரி 400 மி.கி அளவுக்கு குறைவாக எடுத்துக்கொள்வது நல்லது. எதற்கு தெரியுமா? அப்போதுதான் காபிக்கு நீங்கள் அடிமையாக இல்லாமல் இருப்பீர்கள். இதன்விளைவாக காபியை குடித்தே ஆகவேண்டும் என்ற நிலை வராது.
காபி குடித்தால் எந்த விளைவும் ஏற்படாமல் இருந்தால் எப்படி? பதற்றம், கழிச்சல், ரத்த அழுத்தம் ஆகிய பிரச்னைகள் ஏற்படும். இதற்கு பதிலாகத்தான் தூக்கம் வராமல் சக்திமானாக உட்கார்ந்து வேலை செய்வதற்கான சக்தியை காபி வழங்குகிறது. வெறும் வயிற்றில் காபி குடித்தால் செரிமானம் பாதிக்கப்படுகிறது என்பதற்கான உறுதியான அறிவியல் ஆதாரங்கள் கிடையாது. எனவே சந்தோஷமாக காபி பருகுங்கள், கோபிகா சாக்லெட்டை சாப்பிடுங்கள். வாழ்க்கையை கொண்டாடுங்கள்.
நன்றி - ஹெல்த்லைன்