ஈரானின் வெளிநாட்டு படைகளை வழிநடத்தியவர் க்வாசிம் சோலெய்மானி!




Image result for qassem soleimani
the print




ஈரான் படைத்தலைவர் க்வாசிம் சோலெய்மானி, பாக்தாத் விமானநிலையத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் கொல்லப்பட்டு உள்ளார். கார் மீது கொடூரமாக நடத்தப்பட்ட தாக்குதலில் கார் முழுவதும் எரிந்துபோனது. சொக்கப்பனையாக எரிந்து உயிரை விட்ட இவரது இடத்தில் இவருக்கு அடுத்தபணி நிலையில் இருந்த இஸ்மாயில் கானி நியமிக்கப்பட்டுள்ளார்.

ஈரானில் நாற்பது ஆண்டுகளாக அமெரிக்காவின் பொருளாதார தடை அச்சுறுத்தல்களையும் தாங்கி நின்ற நம்பிக்கையான ஆளுமை இவர். சிரியாவில் அதிபர் பசார் ஆசாத்தின் பின்னே ஈரானின் படைகள் நின்றதால், அமெரிக்க படைகள் பெரும் உயிரிழப்பைச் சந்தித்து  வந்தன.

1980இல் ஈராக்குடன் நடந்த இஸ்லாமிய குடியரசு தொடர்பான போர்களில் சிறப்பான பங்களிப்பை அளித்தவர் க்வாசிம் சோலெய்மானி.

2003ஆம் ஆண்டு வரை க்வாசிம் யாருக்கும் தெரியாமல் தன் உத்தரவுகளை இட்டு ஏராளமான அமெரிக்கர்களை கொன்று கொண்டிருந்தனர். பின்னர்தான் அமெரிக்க உளவுப்படை, க்வாசிமை முக்கியமான தளபதி என அடையாளம் கண்டு அவரை கொல்வதற்கான முன்தயாரிப்பு வேலைகளை முடுக்கிவிட்டது. அரசியலுக்கு பலரும் இவரை அழைத்தனர். ஆனால் தனக்கு ராணுவ விஷயங்களே போதும் என்று நாற்காலியில் அமர்ந்துவிட்டார்.

இறப்பு என்பது அவருக்கு புதிது. ஆனால் இது தொடர்பான செய்திகளில் ஏற்கெனவே அடிபட்டுக்கொண்டிருந்த ஆள்தான் இவர். 2006 மற்றும் 2012இல் விமான விபத்திலும், அமெரிக்க ராணுவத்தின் தாக்குதலிலும் இறந்ததாக செய்திகள் வெளிவந்தன.

1979ஆம் ஆண்டு ஈராக், ஈரானின் உள்ளே புகுந்து ஆக்கிரமிக்க முயன்றது. எட்டு ஆண்டுகள் நடந்த இந்தபோரில் க்வாசிம் சோலெய்மானி முக்கியமான பங்களிப்புகளை செய்துள்ளார். அவரும் அவரது படையினரும் ஈராக்கினரின் வேதியியல் ஆயுத தாக்குதல்களையும் எதிர்கொண்டு பிழைத்தவர்கள்.

சிரியாவில் அதிபருக்கு ஆதரவாகவும் ஐஎஸ் தீவிரவாதிகளுக்கு எதிராகவும் பல திட்டங்களை வகுத்து கொடுத்து வென்றிருக்கிறார். இவை புகைப்படங்களாக ஊடகங்களில் வெளிவந்தபோதும்,அதில் சாதாரண உடைகளிலேயே இருந்தார்.

நன்றி - டெக்கன் கிரானிக்கல்