ஜனநாயக இந்தியாவுக்கான போராட்டக்காரர்கள்!




Image result for anti caa protest





இந்தியாவில் சிஏஏ, என்பிஆர் ஆகிய சட்டங்களுக்கு எதிரான போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதற்கு கட்சிகள் பின்னாளில் ஆதரவு கொடுத்தாலும், பெரிய தலைவர்களின் முன்னணி இன்றியே இப்போராட்டங்கள் கச்சிதமாக உதவுகின்றன. அனைத்துக்கும் தொழில்நுட்பங்கள் சிறப்பாக உதவி வருகின்றன. இவர்களில் முக்கியமான சில போராட்டக்கார ர்களைப் பற்றி பார்ப்போம். 


சரித்தர் பார்தி - 27
சிங்கப்பூரைச் சேர்ந்த வழக்குரைஞர்


2014ஆம் ஆண்டு பாஜக அரசு ஆட்சிக்கு வந்தது. அதிலிருந்தே அரசு அமைப்புகள், கொள்கைகள் அனைத்தும் வேறுபடத்தொடங்கின. அவர்கள் தம் கொள்கைகளுக்கு ஏற்ப நாட்டின் அனைத்து விஷயங்களையும் மாற்றி அமைக்கத் தொடங்கினர். இது ஆபத்தானது என்று எனக்குத் தோன்றியது என்கிறார். இதன் விளைவாக இந்தியாவில் போராட்டங்களுக்கு செல்லத் தொடங்கியுள்ளார். இதனை இவர் மற்றொரு மாணவர்களின் போராட்டமாக கருதவில்லை. நாட்டின் ஜனநாயகத்தை காப்பதற்கான போராட்டமாக கருதுகிறார். 



ஷால்மொலி ஹால்டர், 26

மேம்பாட்டு ஆலோசகர்

அரசு மக்களின் மதிப்புகளுக்கு உணர்ச்சிகளுக்கு இடமளிக்கவில்லை என்கிறார் ஹால்டர். இவர், அரசு மதம், குடியுரிமை போன்ற விஷயங்களில் தேவையில்லாமல் தலையிடக்கூடாது என நினைக்கிறார். யாருக்கு குடியுரிமை வழங்குவது என்ற தேர்வில் மக்களின் மதம், சமூக பொருளாத அந்தஸ்து ஆகியவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும் என்பது இவரின் கோரிக்கை. 

அர்ஷாத் அஹ்மத் கான், 19

புகைப்படக்காரர், பிபிஏ மாணவர்,

ஹம்தார்ட் பல்கலைக்கழகம் 


ஜாமியா மிலியா பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடந்த வன்முறை தாக்குதலுக்குப் பிறகு போராட்டத்தில் பங்கேற்றவர் அர்ஷாத். அரசு இஸ்லாமிய மக்கள் பற்றி எந்த அக்கறையும் இல்லாமல் இருக்கிறது. அவர்கள் பற்றி வெறுப்பையும் பிற மதத்தினரிடையே பரப்பிவருகிறது. இந்த செயல்பாடு அரசின் நடவடிக்கைகளை சந்தேகிக்க வைத்திருக்கிறது என்கிறார். 


ஆயூஷா சிங், 18

பிஏ ஆங்கில மாணவி, டெல்லி பல்கலைக்கழகம்

இவரது குடும்பம் வலதுசாரி கருத்துகளை ஆதரிக்கிறது. ஆனால் இவர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். ஏன் என்று கேட்டால், காரணம் நாம் கல்வி கற்று இருக்கிறோம். இந்திய அரசு பிற இனத்தவருக்கு இடையே வெறுப்பை பரப்புகிறது. அதற்கு எதிராக நாங்கள் போராடுகிறோம். இந்த போராட்டம் வெற்றி, தோல்வி என்பதற்குள் அடைபடவில்லை. நாங்கள் எதற்கு போராடுகிறோம் என்பதை மக்கள் அறிந்தால் சரிதான் என்கிறார். 

ஃபகத் அஹ்மது, 

பிஹெச்டி மாணவர், டாடா சமூக அறிவியல் நிறுவனம்


இந்திய அரசு, தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடியுரிமை சட்டத்தில் மக்களை பதிவு செய்யச்சொல்கிறது. அதற்கு பதில் வேலைவாய்ப்பு இல்லாதவர்கள், பாலியல் தாக்குதலுக்கு ஆளான பெண்களை கணக்கெடுத்தால் உருப்பபடியான பணியாக இருக்கும். அரசு, தான் நிதியளிக்கும் அரசு நிறுவனங்களை குறிவைத்து பல்வேறு விதிகளை இறுக்கி வருகிறது. இது மாணவர்களை தீவிரமான கோபத்தில் தள்ளுகிறது என்கிறார். 


டெப்ஸ்மிதா சௌத்ரி, 24

ஜாதவ்பூர் பல்கலைக்கழக மாணவி 

மேற்கு வங்கத்தில் நடந்த குடியுரிமைச்சட்டத்திற்கு எதிரான போராட்டத்தில் மேடையேறி, அதன் பாதகங்களை மக்களுக்கு விளக்கினார். பட்டமளிப்பு விழாவிலும் குடியுரிமைச்சட்டத்தை ஏற்க மாட்டோம் என குரலுயர்த்தி அனைவரின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். நாட்டை வளர்ச்சிப் பாதைக்கு கொண்டு செல்லக்கூடிய மாணவர்களை அரசு தெருவில் போராட்டத்திற்கு அழைத்து வந்திருக்கிறது என்கிறார். 


சலீலா கப்பான், 45

மக்கள் தொடர்புத்துறை, பெங்களூரு


அரசு கொண்டு வந்த பணமதிப்பு நீக்கம் முதலே மக்களிடம் நம்பிக்கையை இழந்துவிட்டது. உள்துறை அமைச்சர் போராட்டங்கள் நடந்துகொண்டிருந்தாலும் குடியுரிமைச்சட்டம், தேசிய மக்கள்தொகை பதிவேடு சட்டம் நிறைவேற்றப்படும் என்கிறார். இவர் மூன்று குடியுரிமைச்ச்சட்ட எதிர்ப்பு போராட்டங்களில் பங்கேற்றுள்ளார். 



சங்கேஸ் குமார், 
பட்டதாரி, பாட்னா


2014-19 ஆண்டுகளில் பாஜகவிற்கு வாக்களித்தவர், அதற்காக இன்று வருந்துகிறார். பெரியளவு போராட்டங்களில் இவர் பங்கேற்கவில்லை. காரணம், வேலை தேடும் பணியில் சங்கேஸ் உள்ளார். என்ஆர்சியை அரசு அமல்படுத்துவது பிரச்னை இல்லை. அச்சட்டத்தை முஸ்லீம்களுக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது என்கிறார். 


நன்றி - இந்தியா டுடே