மருத்துவமனைக்குள் பேய்! - நந்தினி நர்சிங் ஹோம் படம் எப்படி?
நந்தினி நர்சிங் ஹோம் - தெலுங்கு
இயக்கம் - பிவி கிரி
இசை- அச்சு, சேகர் சந்திரா
சந்து ஊரில் எம்பிஏ படித்துவிட்டு வேலை தேடி நகருக்கு வருகிறார். வருகிற இடத்தில் மருத்துவமனையில் வேலை கிடைக்கிறது. அப்போது எம்பிஏக்கு பதில் எம்பிபிஎஸ் ரெஸ்யூமில் எழுத்துகள் மாற பிரச்னைகள் தொடங்குகிறது. ஜூனியர் டாக்டராக அவரைத் தேர்ந்தெடுக்கின்றனர். தன் நண்பர் மூலம் எப்படியோ சமாளித்து வேலை செய்கிறார். ஆனால் மருத்துவர் என்றால் அடிப்படையே தெரியாமல் உள்ளவர் எப்படி சமாளிக்கிறார்? அங்கு அவருக்கு மருத்துவமனை நிர்வாகி மீது காதல் வருகிறது. காசுதான் முக்கியம் முதல் காதல் காசுக்காக புட்டுக்கொண்டு விட்டது. இதுவும் அப்படி ஆக கூடாது என சந்து நினைக்கிறார். இதற்கிடையில் மருத்துவமனையில் மர்ம நிகழ்ச்சிகள் நடக்கத் தொடங்குகின்றன. அதனை சந்து உணர்ந்தாரா என்பதுதான் கதை.
ஆஹா
படத்தில் பெரும்பலம் வெண்ணிலா கிஷோர், சப்தகிரியின் காமெடிக் காட்சிகள்தான். மற்றபடி நாயகி, நாயகன் நடிக்க வாய்ப்பு குறைவு. படத்தின் பாடல்கள் கேட்க கேட்கத்தான் பிடிக்கும்.
மோசம்
படத்தின் நீளம். தக்கனூன்டு கதையை வைத்துக்கொண்டு எவ்வளவு தூரத்திற்கு இழுப்பீர்கள். இயக்குநர் ஏலோலோ ஐலேசா சொல்லி இழுத்திருக்கிறார்.பெரிய ட்விஸ்டுகள் கிடையாது. நான லீனியர் கதை சொல்ல லும் கூட ஒருகட்டத்தில் சலிப்படைய வைக்கிறது.
ட்விஸ்டுகள் கிடையாது. படத்தை விரும்பி பார்ப்பதற்கான ஒரே வாய்ப்பு காமெடிதான். திகில் ட்விஸ்டு கூட பெரிய ஈர்ப்பாக இல்லை. இறுதியாக காதலிதான் அப்படி செய்திருக்கிறார் என்பது அப்படியா என்பது போலத்தான் இருக்கிறது. காரணம் திகிலை பயத்தை வளர்த்தெடுப்பதை தொடர்ச்சியாக இயக்குநர் செய்யவில்லை.
புதுமையான முயற்சி. நிறைய ஐடியாக்களை முயற்சித்தை படத்தை கெடுத்திருக்கிறார்கள்.
மோசமில்லாத முயற்சி.
கோமாளிமேடை டீம்