ஆட்டிசத்தைப் புரிந்துகொள்ள.....



Image result for ஆட்டிசம் சில புரிதல்கள்


ஆட்டிசம் சில புரிதல்கள்

யெஸ்.பாலபாரதி

பாரதி புத்தகாலயம்

ரூ.50


ஆட்டிசம் என்றால் என்ன, அதனை எப்படி அணுகுவது, இக்குறைபாடு கொண்ட குழந்தைகளை எப்படி பயிற்சி அளிப்பது, சமூகத்தில் கலந்து உறவாட வைப்பது, ஆட்டிசக் குழந்தைகளின் உணவுப்பழக்கம் என பல்வேறு விஷயங்களை ஆசிரியர் விரிவாக விளக்கியிருக்கிறார்.

ஆட்டிசத்தை முதலில் கண்டறிந்து கூறிய லியோ கானர் என்ற மருத்துவர் தொடங்கி, பெற்றோருக்கான குறிப்புகள், பயிற்சிகள், இக்குறைபாட்டுடன் சாதித்த ஆல்பிரட் ஐன்ஸ்டீன் வரை விளக்கமாக எழுதப்பட்டுள்ளது. இது வெறும் ஆட்டிசம் பற்றிய நூலாக இல்லாமல் அனுபவ நூலாக இருப்பதன் காரணம், ஆசிரியரின் மகனும் ஆட்டிசக் குறைபாடு பாதிப்பு உள்ளவன் என்பதால்தான்.

சாதாரண பள்ளிகளில் ஆட்டிசக் குழந்தைகளை படிக்க வைப்பது சிரமம். எனினும் அதனை ஆசிரியர் முக்கியம் என்கிறார். சிறப்பு பள்ளிகளை விட அரசு பள்ளிகளில் ஆட்டிச குறைபாடு உள்ள மாணவர்கள் படிக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறார் பாலபாரதி.

சாதாரணமானவர்கள் சூழலைப் புரிந்துகொண்டு செயல்படுவார்கள் என்றால், ஆட்டிச குறைபாடு கொண்டவர்களுக்கு அனைத்தையும் சொல்லித் தருவது கட்டாயம்.  ஆட்டிசக் குறைபாட்டின் பாதிப்பை குறைக்கும் விதமாக பல்வேறு தெரபிகளும் இந்த நூலில் கூறப்பட்டுள்ளன. ஆட்டிசப் பெற்றோருக்கும் பல்வேறு ஆலோசனைகள் உள்ளன. அவற்றைக் கடைபிடிப்பது ஆட்டிசக் குழந்தைகளின் பாதிப்பை குறைக்கும்.

கோமாளிமேடை டீம்