இந்த வாரம் முழுக்க நடைபெறும் பிரபல விழாக்கள் - ஒரு பார்வை



Image result for adivasi mela





இந்த வாரம் நடைபெறும் விழாக்கள்

விழாக்கள்


ஆதிவாசி திருவிழா ஜன.26-பிப்.9 வரை

ஒடிசா மாநிலத்திலுள்ள புவனேஷ்வரில் ஆண்டுதோறும் நடைபெறும் பழங்குடியினர் திருவிழா. இதில் 60க்கும் மேற்பட்ட பழங்குடியினர் பங்கேற்கின்றனர்.  தம் கலாசார விஷயங்களை பார்வையாளர்களுக்கு கலை, உணவு, இசை, நடனம் ஆகியவற்றின் வழியாக வெளிப்படுத்துகின்றனர்.

சிலிகா பறவைத் திருவிழா

 ஜன.27-28

ஒடிசா மாநிலத்திலுள்ள மங்கலஜோடி சதுப்புநிலம் மற்றும் நலபானா ஆகிய இடங்களில் இந்த விழா ஆண்டுதோறும் நடைபெறுகிறது. மூன்றாவது ஆண்டாக நடைபெறும் இவ்விழாவை, சுற்றுலாத்துறை நடத்துகிறது. புகைப்பட கண்காட்சி, பறவைகளை பார்த்தல், பறவைகளைப் பற்றிய செய்திகளை கூறுவது என நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.

ரீத் 2020
 ஜன.29 -பிப்.2

ராஜஸ்தானின் நடைபெறும் கலைவிழா. கைவினைப்பொருட்கள், இசை, சூஃபி நடனம், இசையோடு தியானம் என களைகட்டும் விழா இது. ராஜஸ்தானிலுள்ள ஜெய்சல்மீரில் உள்ள நச்சானா ஹவேலி, நாராயண நிவாஸ் பேலஸ் ஆகிய இடங்களில் இந்த விழா நடைபெறுகிறது. 

இந்தியா கலை விழா
ஜன.30 - பிப்.2

2008ஆம் ஆண்டு தொடங்கி நடைபெறும் விழா. டில்லியிலுள்ள ஓக்லா தொழிற்பேட்டையிலுள்ள என்எஸ்ஐசி கண்காட்சி மைதானத்தில் இவ்விழா நடைபெறுகிறது. இதில் நவீன ஓவியங்கள், சிற்பங்கள், படைப்புகள் உட்பட 75 கேலரிகள் இடம்பெறுகின்றன. புத்த வெளியீடுகளும் இங்கு உண்டு.


நன்றி - டிரிப் சேவி வலைத்தளம்

வெளியீடு - தினமலர் பட்டம்



பிரபலமான இடுகைகள்