ரத்தம் பார்த்தால் இன்பம் பெருகும் - பீட்டர் கர்டன்



Peter Kürten


அசுரகுலம் - இன்டர்நேஷனல்

பீட்டர் கர்டன்


ஜெர்மனியின் கிளின்ஜென்பல்ட்ஸ் சிறைச்சாலை. சூரியன் மெல்ல சோம்பல் முறித்து கதிர்களை விரித்தபோது, அந்த கைதியை கில்லட்டினால் வெட்டுவதற்கு போலீஸ் அழைத்தனர். ஆண்டு 1931 ஜூலை 2 ஆம் தேதி. 

அந்தக் கைதியின் பெயர் பீட்டர் கர்டன். 70க்கும் மேற்பட்ட சிறுவர் சிறுமிகளை கடத்தி கொன்று அவர்களின் ரத்தம் குடித்தவர். புகைப்படத்தை நன்கு உற்றுப்பார்த்தால் ஹிட்லர் கூட தெரியலாம். வல்லுறவு, சித்திரவதை, உடல் உறுப்புகளை தின்பது என அனைத்து கொடூரங்களிலும் முனைவர் பட்டம் வாங்கியவர் பீட்டர் கர்டன். மரியாதைக்குரிய ஆள் போல புகைப்படங்களில் தெரிவார். வெளியே ரோஜாப்பூ போல சிரித்தாலும் அவரின் உள்ளுக்குள் மிருகம் உறுமிக்கொண்டிருப்பதை யாரும் அறியவில்லை. 

சிறுவயது வாழ்க்கை பிற கொலைகார ர்களை போலவே இவருக்கும் அமைந்தது. குடிகாரப் பெற்றோர். கிடைத்த கேப்பில் எல்லாம் தவறுகளைக் கண்டுபிடித்து பீட்டரின் கன்னத்தில் அறைந்தனர். தாங்கள் பாலுறவு கொள்வதை அவரது தந்தை மகன் முன்னிலையில் நடத்துவார். அவன் கண்டிப்பாக பார்த்தே ஆகவேண்டும், முகத்தை திருப்பினால் நெஞ்சிலேயே மிதிப்பார் தந்தை. இவரது வாழ்க்கை கரடுமுரடாக சென்றுகொண்டிருக்கும்போது அவரது வீடு இருந்த தெருவில் நாய் பிடிப்பவர் பழக்கமானார். அவரோடு பேசிக்கொண்டிருக்கும்போது விலங்குகளை சித்திரவதை செய்வது பற்றி விளக்கினார். பெற்றோரிடம் வதைப்பட்டுக்கொண்டிருக்கிற நிலையில் அவருக்கு தான் அதிகாரம் உள்ளவனாக விலங்குகளை துன்புறுத்துவது பிடித்திருந்தது.

பீட்டருக்கு வயது 13. அவருக்குள் டெஸ்டோஸ்டிரோன் வேகமாக கொந்தளிக்க தனது பெண்தோழியிடம் நெருங்கினார். ஆனால் அவளோ அவனை விலக்கிவிட்டு சென்றுவிட்டாள். அதற்காக, அப்படியே இருந்துவிட முடியுமா? விலங்குகளிடம் தன் செக்ஸ் ஆசையைத் தணித்துக்கொண்டார். அதோடு அவற்றை சித்திரவதை செய்து கொல்வது பாலுறவை விட சந்தோஷம் தந்தது. 

பின் வீட்டில் இருக்கவேண்டுமென்று அவருக்கு தோன்றவில்லை. முடிந்தளவு காசு திருடி வந்து விலைமாதுக்களுக்கு கொடுத்து ஜல்சா செய்தார். தன்னை விட இரண்டு வயது மூத்த விலைமாதுவுடன் இரண்டு ஆண்டுகள் வாழ்ந்தார். ஃபிராடு செய்து பணம் சம்பாதித்தவர் வெகு விரைவில் போலீசிடம் மாட்டினார். நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை கிடைத்த து.


சிறை தண்டனை முடிந்து வெளியே வந்தவருக்கு ராணுவ வேலை கிடைத்தது. அங்கு சென்றும் பணிகளை ஏற்காமல் மனதில பாலுறவு கற்பனை வளர்த்துக்கொண்டார். ராணுவத்தில் இந்த ஒழுங்கீனத்திற்கு தண்டனை கொடுத்தார்கள். அது அவருக்கு மகிழ்ச்சி கொடுத்தது. 1913ஆம் ஆண்டு வெளியே வந்தார். கொலைகளுக்கு அச்சாரம் அன்று தொடங்கியதுதான். 

அந்த ஆண்டின் மே மாதம் விலைமாதுக்கள், விலங்குகள் ஆகியவற்றோடு அவர் கொண்ட பாலுறவு திருப்தி தரவில்லை. எனவே பக்கத்திலிருந்து வீட்டில் நுழைந்தார். கொள்ளையடிப்பதுதான் லட்சியம். ஆனால் உரிமையாளரின் ஒன்பது வயது மகளைப் பார்த்தது பாலுறவு நிச்சயம் என உறுதி செய்துகொண்டார். சிறுமியின் கழுத்தை நெரித்து, அவளின் ஆதாம் ஆப்பிளை கத்தியால் அறுத்தார். ரத்தம் பீய்ச்சியடிக்க சிறுமி துடித்து இறந்தாள். ரத்தம் அவளின் கழுத்து வழியாக கீழிறங்கி தரையில் சிந்தியபோது, பீட்டர் சுய இன்பம் அனுபவிக்கத் தொடங்கினார். அவருக்கு ரத்த துளிகள்தான் தனக்கான இன்பம் என்பதை உணர்ந்தார். 


தொகுப்பு - வின்சென்ட் காபோ

நன்றி - ஆல்தட்இன்ட்ரஸ்டிங் வலைத்தளம். 










 

பிரபலமான இடுகைகள்