கர்ப்பிணிகளுக்கு சுவையுணர்வு மாறுவது ஏன்?
giphy |
மிஸ்டர் ரோனி
கர்ப்பிணிகளுக்கு நாக்கின் சுவை ஏன் மாறுகிறது?
புளி, சாம்பல் தேடி ஓடுகிறார்கள் என்று நேரடியாக கேட்காமல் மறைத்து கேட்கிறீர்கள். காரணம் ஒன்றுதான். உடலில் ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்கள் வேகமாக அதிகரிக்கும் காலகட்டம் அது. இதனால் உடலில் நடக்கும் மாறுதல்களால் நாக்கின் சுவை அறியும் தன்மை மாறுபடுகிறது.
ஜிங்க் குறைபாட்டால் சுவை அறியும் தன்மை மாறுகிறது என்று முதலில் பலரும் நினைத்து வந்தார்கள். ஆனால், 2009ஆம் ஆண்டு டோக்கியோ பல்கலைக்கழகம் செய்த ஆய்வில் ட்ரைமெஸ்டரில் கர்ப்பிணிகளின் சுவையுணர்வு மாறுபடுவதில்லை. ஜிங்க் அளவிலும் மாற்றமில்லை என்று கூறியிருக்கிறார்கள்.
2006ஆம் ஆண்டு பிரிஸ்டல் பல்கலைக்கழகம் செய்த ஆய்வில், உடலில் சிறுநீர் பாதையில் பல்வேறு பிரச்னைகளை கர்ப்பிணிகள் சந்திப்பதாக கண்டறிந்து கூறினர். இதுதான் நாக்கின் சுவையுணர்வை பாதிக்கிறதா என்று உறுதியாக தெரியவில்லை. ஆனால் நாக்கின் சுவை உணர்வுக்கும் நம் மூளைக்கும் நெருக்கமான தொடர்பு உண்டு.
நன்றி - பிபிசி