விவசாயத்திற்கு உதவும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் - ஒரு பார்வை!



Image result for VilFresh
செல்வக்குமார் வரதராஜன்- இடதிலிருந்து இரண்டாவதாக..



விவசாயத்திற்கு உதவும் ஸ்டார்ட்அப் நிறுவனங்கள்

தொன்மையான விதை, பூச்சிக்கொல்லி நிறுவனங்களிலிருந்து ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் மாறுபடுவது, மக்களின் தேவைகளை எளிதாக தீர்த்து வைப்பதில்தான். இதனால் அவை வெற்றிகரமான நிறுவனங்களாக மாறுகின்றன.  பிரதமர் மோடி விவசாயிகளின் வருமானத்தை 2022க்குள் இரட்டிப்பாக்கும் திட்டத்தை அறிவித்துள்ளார். அவரின் நம்பிக்கைக்கு ஊக்கமூட்டும் விவசாய நிறுவனங்கள் இதோ...

VilFresh
2016ஆம் ஆண்டு கோவையைச் சேர்ந்த செல்வக்குமார் வரதராஜன் தொடங்கிய ஸ்டார்ட்அப் நிறுவனம் இது. கிராம மக்களிடம் இருந்து பால் பொருட்களைப் பெற்று நகரங்களில் விற்று, அம்மக்களுக்கு உதவுகிறது. இம்முறையில் நேரடியாகவும், மறைமுகமாகவும் இரண்டாயிரம் பேர்களுக்கு மேல் வேலைவாய்ப்பு கிடைக்கிறது. தனது சிறப்பான செயற்பாடு காரணமாக, அண்மையில் 1.15 கோடி ரூபாய் முதலீட்டைப் பெற்றுள்ளது.  விவசாயிகளை மேம்படுத்துவதும், கிராமத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்குவதும், நகரத்தினரை எங்களது பொருட்களின் மூலம் ஆச்சரியப்படுத்துவதும்தான் எங்கள் நோக்கம் என்றார் செல்வக்குமார்.

FreshVnF
மும்பையைச் சேர்ந்த இந்த நிறுவனம் விவசாயப் பொருட்களை நகரங்களில் விற்கிறது. ஃபிரஷ் விஎன்ஃப் என்ற இந்த நிறுவனத்தை, அதுல் குமார், விகாஸ் டோசலா, ஸ்மித் ராய், ஆஷிஷ் கிருஷ்ணாட்ரே ஆகியோர் இணைந்து தொடங்கினர்.  தினசரி, 15 டன்னுக்கும் அதிகமான விவசாயப் பொருட்களை 300 வாடிக்கையாளர்களுக்கு வெற்றிகரமாக விநியோகிக்கிறது இந்நிறுவனம். 

Fruit Box & Co
2018ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட புதுடில்லியைச் சேர்ந்த பழங்களை விற்பனை செய்யும் இவணிக நிறுவனம் இது. ரிஷி சகுஜா மற்றும் அவரது உறவினரான ராதிகா குப்தா சிங் ஆகியோர் இணைந்து இந்த நிறுவனத்தைத் தொடங்கினர்.விவசாயிகளிடமிருந்து காய்கறிகள், பழங்களை வாங்கி பிக் பாஸ்கட் மற்றும் மாடர்ன் பஜார் ஆகிய நிறுவனங்களுக்கு விற்று வருகின்றனர்.

Ecozen Solutions
2010ஆம் ஆண்டு உருவான சூழலியல் சார்ந்த நிறுவனம். விவசாயப் பொருட்களை விற்று வருகிறது. கூடுதலாக, பயிர்களை வளர்ப்பதற்கான ஆராய்ச்சிகளை செய்கின்றனர். நீர்பாய்ச்சுவதற்காக சோலார் முறையில் இயங்கும் குழாய் கட்டுப்பாட்டு அமைப்பு, குறைந்த வெப்பநிலையில் இயங்கும் அறை ஆகியவற்றைக் கண்டுபிடித்து உள்ளனர். இந்நிறுவனத்தை விவேக் பாண்டே, பிரதீக் சிங்கால், தேவேந்திர குப்தா ஆகியோர் இணைந்து தொடங்கியுள்ளனர்.

நன்றி - யுவர் ஸ்டோரி