நெற்பயிரை பயிரிட நாற்றங்காலாக நட வேண்டுமா?






Beautiful, Cottage, Rice Field, Landscape, Vietnam
pixabay




நெல்லின் சேமிப்பு வரம்பு

நவீன நெல்ரகங்களை ஆலைகளில் இரண்டு ஆண்டுகள் மட்டுமே சேமித்து வைக்கின்றனர். காலாநமக், சிவப்பரிசி போன்ற உப்புச்சத்து கொண்ட அரிசி ரகங்களை அதிகபட்சம் மூன்று ஆண்டுகள் சேமித்து வைக்க முடியும். சேமிக்கும் காலம் அதிகரிக்கும்போது நெல்லின் முளைப்புத்திறன் குறையும். 

நெல்லுக்கு நாற்றாங்கால் எதற்கு?

நெற் தாவரத்தின் கனிதான் நெல். நெல் என்பது ஒருவித்திலை தாவரம். கடினமான ஓடுகளைக் கொண்ட தென்னை மரம் போன்றவற்றை மண்ணில் நடலாம். ஆனால் நெல்லுக்கு இந்த வாய்ப்பு இல்லை. இப்பயிருக்கு அதிக நீர்வளம், சரியான சீதோஷ்ணம் தேவை. அதிக மழைப்பொழிவு கொண்ட நிலமாக இருந்தால் நெல் அழுகிவிடும். அதேநேரம், நெல், வறட்சியான மண்ணில் இருந்தால் காய்ந்துவிடும். எனவே நெற்பயிருக்கு நாற்று விட்டு அதன் முளைப்புத் திறன் அதிகப்படுத்தி நடுகிறார்கள். ஒரைசா சட்டவைவா எனும் நெல்லின் காட்டு ரகத்திற்கு இவை எதுவும் தேவையில்லை. அவை தானாகவே நிலத்தில் விழுந்து முளைக்கும். பிற விதை ரகங்களைப் போல நிலத்தில் நெல்லைத் தூவினால் அவை முளைக்க அதிக சவால்களை எதிர்கொள்ளும் எனவே, நெல்லுக்கு நாற்றாங்கால் உருவாக்கி நெற்பயிரை வயல்களில் எடுத்து நடுகிறார்கள்.   

-இளங்கோகிருஷ்ணன்

மருதம் மீட்போம் நூல் ஆசிரியர், கவிஞர்.

நன்றி - தினமலர் பட்டம்

பிரபலமான இடுகைகள்