இடுகைகள்

பாட்டி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கைநடுக்கத்தை குறைக்க காலத்தை புதிதாக மீண்டும் தொடங்கினால்... வேலி ஆஃப் லாண்டெர்ன்

படம்
  வேலி ஆஃப் லாண்டெர்ன் அனிமேஷன் ஒரு கிராமம். அந்த கிராமத்தின் சிறப்பு, உயரமாக அமைக்கப்பட்ட இடிபாடுகளைக் கொண்ட கோட்டை. கோட்டை அமைந்துள்ள கிராமத்தில் ஆலிஸ்டைன் என்ற வயதான பெண்மணி, அவரது மகள், மருமகன், பேரன் ஆகியோருடன் வசிக்கிறாள். வயதான பாட்டிக்கு பார்க்கின்சன் நோய் வந்துவிடுகிறது. அது பாரம்பரியமாக வரும் குடும்ப நோய். தான் ஆரோக்கியமாக பிறருக்கு பயனுள்ளவளாக இருக்கவேண்டுமென நினைக்கிறாள். எனவே, ஊரில் உள்ள பழங்கதையில் சொல்லும் விஷயத்தை செய்கிறாள். ஆண்டை மாற்றி வைப்பது. இதன்மூலம் மக்களுக்கு ஒரே ஆண்டு திரும்பத் திரும்ப வருகிறது. ஆலிஸ்டைன் பாட்டி, ஆண்டுதோறும் வரும் விளக்கு திருவிழாவில் புத்தாண்டை வரவேற்கும் விதமாக குறைந்த பணத்திற்கு காகித விளக்குகளை செய்து கொடுக்கிறாள். அதை மனதிருப்திக்காக செய்கிறாள். கிடைக்கும் பணம் என்பது செய்யும் உழைப்பிற்கு போதுமானதல்ல. அவளது குடும்பம் பாரம்பரியமாக செய்யும் வேலை அது. ஆனால் பார்க்கின்சனால் ஏற்படும் கைநடுக்கம், விளக்கை ஏற்றுவதற்கு கூட விடுவதில்லை. தடுமாறுகிறாள். ஆலிஸ்டைன் எதற்கு இதை திரும்ப திரும்பச் செய்கிறாள் என்றால், அவளுக்கு கைநடுக்க நோய் திரும்பத்

வாசிக்க வேண்டிய சிறுவர் கதைகள்!

படம்
  கிராண்ட்பா ஃபிராங்க் கிரேட் பிக் பக்கெட் லிஸ்ட் ஜென்னி பியர்சன் ஓவியம் டேவிட் ஓ கானல் அஸ்பார்ன் புக்ஸ் ஃபிராங்கிற்கு அவரது பாட்டியிடமிருந்து பணம் கிடைக்கிறது. அதுவும் அவன் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு.... ஆனால் அதைப் பெற நிறைய விதிகள், நிபந்தனைகள் உள்ளன. கூடவே புதிய தாத்தாவும் வருகிறார். பணத்தை பிராங்க் எப்படி செலவு செய்தான், அதனால் அவனுக்கு மகிழ்ச்சி கிடைத்ததா என்பதே கதை.  ஹவ் டு டிரெய்ன் யுவர் டாட் கேரி பால்சன் மேக்மில்லன்  பனிரெண்டு வயது சிறுமி கார்ல், தனது அப்பாவை எப்படி தனக்கேற்றபடி பயிற்சி கொடுத்து மாற்றுகிறாள் என்பதே நூலின் கதை. கார்லின் அப்பா, அவளுக்கு எடுத்து தரும் துணி கூட பழையதாகவும் குப்பையில் இருந்து எடுத்து வந்தது போலவும் இருக்கிறது. அப்பாவின் இப்படிப்பட்ட செயலால், தான் நண்பர்கள் மத்தியில் அவமானப்படுவதாக கார்ல் நினைக்கிறாள். இதனை எப்படி மாற்றுகிறாள் என்பதே கதை.  கிரேட்டா அண்ட் தி கோஸ்ட் ஹன்டர்ஸ்  சாம் கோப்லேண்ட் ஓவியம், சாரா ஹோம் கிரேட்டாவிற்கு திடீரென பேய்களைப் பார்க்கும் சக்தி கிடைக்கிறது. அவளது பூர்வீக வீட்டில் தனது தாத்தாவைக் கூட பார்க்கிறாள். இந்த சக்தியை வை