இடுகைகள்

கானகன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காடுகளை பாதுகாக்க அதை நேசிக்கும் பளியன் செய்யும் கொலை - கானகன் - லஷ்மி சரவணக்குமார்

படம்
  கானகன் (நாவல்) லஷ்மி சரவணக்குமார்   பளியர்களின் வாழ்க்கையை பேசும் நாவல். பளியக்குடிகள் காடுகளை நேசித்து வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு வேலை என்பது விவசாயம் சார்ந்த்துதான். அதுவும் கூட காட்டின் இயல்பறிந்து நடப்பதுதான். அதை அழித்து தன் வழிக்கு கொண்டு வருவது அல்ல. ஆனால் இதுபோன்ற நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக நடக்காமலா இருக்கும்? அப்படியான அழிவுகளை தொடங்கி வைப்பவனாக இருக்கிறான் தங்கப்பன். நாவல் முழுக்க வரும் பாத்திரம் வேட்டைக்காரரான தங்கப்பன்தான். இவன்தான் வேட்டை என்பதை வாழ்நாள் முழுக்க தொடரும் தன்னை மறக்கும் நிலையாக, பாலுறவு போன்று பார்க்கும் மனிதன். இதனால்தான் தங்கப்பனுக்கு வேட்டை என்பது முக்கியமான ஒன்று. இந்த வேட்டையாடும் வெறியான மனநிலையை கஞ்சா தோட்ட முதலாளிகள், விவசாய பண்ணைக்காரர்கள் பயன்படுத்திக்கொள்கிறார்கள். நாவலின் முதல் காட்சியே காட்டின் அழிவைத் தொடங்கி வைக்கும் நிகழ்வுதான். காட்டின் உணவுச்சங்கிலியை பாதுகாக்கும் குட்டி ஈன்ற பெண் புலியை வேட்டையாடி கொல்கிறார்கள். அதில் தங்கப்பன், மாட்டுப் பண்ணை நடத்தும் அன்சாரிக்காக புலியை வேட்டையாடுகிறான். இதில் ஏற்படும் வினை அதற்கான விளை