இடுகைகள்

ராபின் சர்மா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எனக்கு இன்ஸ்பிரேஷன் இசைதான் - ராபின் சர்மா

படம்
Pinterest/robin sharma அவர் ஒரு வழக்குரைஞர். ஆனால் திடீரென தன் வேலையைக் கைவிட்டு சுயமுன்னேற்ற பேச்சாளர் பிளஸ் எழுத்தாளராக மாறுகிறார். முதல் நூல், அறிமுகமில்லாதவர் என்பதால், தானே அச்சிடுகிறார். அவரது அம்மா அதனை திருத்துகிறார். முப்பது வயதில் அவர் எழுதிய அந்த நூல் தி மங் ஹூ சோல்டு ஹிஸ் ஃபெராரி என்ற நூல். மெகா வெற்றி அந்த நூலுக்குப் பிறகு அந்த எழுத்தாளர் திரும்பிப் பார்க்க நேரமில்லை. இதுவரை 15 நூல்களுக்கு மேல் எழுதிய சாதனையாளர். ஆம். ராபின் சர்மாவைத்தான் மேலே குறிப்பிட்டேன். இவர் எழுதிய பதினைந்து நூல்கள் 75 க்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகி உள்ளது. வழக்குரைஞராக இருந்தீர்கள். திடீரென சுயமுன்னேற்ற பேச்சாளர் பிளஸ் எழுத்தாளராக மாற்றம் எப்படி சாத்தியமானது என்று சொல்லுங்களேன்.  நான் வெற்றிபெற்ற வழக்குரைஞர்தான். ஆனால் என் பணியில் எனக்கு திருப்தியில்லை. உள்ளே ஒரு வெறுமையான சூழ்நிலை. அப்போது தத்துவார்த்தமான சிந்தனைகளையும் அனுபவங்களையும் தேடி வந்தேன். அதுவே நான் தேடிய விஷயங்களை எனக்கு கண்டுபிடிக்க உதவின. அதை விவரித்து எழுதியதுதான் என்னுடைய முதல் நூல்.  உங்கள் அப்பா இந்தியர்