இடுகைகள்

ஒசாகா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நம்பிக்கை அளிக்கும் பெண்கள்! - நவோமி ஒசாகா, ஷானி தண்டா, என்கோஸி ஐவியலா, ஆரோரா ஜேம்ஸ், கிரண் மஜூம்தார்

படம்
            ஷானி தண்டா மாற்றுத்திறனாளி செயல்பாட்டாளர் உறுப்புகளின் செயல்திறன் குறைபாட்டை நான் குறைபாடாக பார்க்கவில்லை . இப்படி இருப்பதும் கூட என்னை அப்படி நினைக்கச் செய்வதில்லை . ஆனால் என்னை வேறுபடுத்தி பார்ப்பவர்களால்தான் அப்படி ஒரு நினைவு எனக்கும் உருவாகிறது என்று வோக் பத்திரிக்கைகைக்கு பேட்டி கொடுத்தார் ஷானி . பிறக்கும்போதே பிரிட்டல் போன் டிசீஸ் என்ற எலும்பு சார்ந்த மரபணு நோய் இவரை பாதித்தது . இதனால் இவர் பதினான்கு வயதில் இவரது கால் எலும்பு ஆறு முறை முறிந்திருக்கிறது . ஆனால் இவரது அம்மா இவரை பாகுபடுத்தி பார்க்காமல் உதவிகளை செய்துகொடுத்து வளர்த்தியிருக்கிறார் . பிறரிடம் உதவி கேட்பதை விட தனக்குத்தானே என்ன செய்யமுடியுமோ அதனை செய்துகொள்ள பழகுவதை வழக்கமாக்கிக்கொண்டிருக்கிறார் ஷானி . ஆசியன் டிஸேபிளிட்டி நெட்வொர் அமைப்பைத் தொடங்கியவர் , வர்ஜின் மீடியாவில் மூன்று ஆண்டுகள் பணிபுரிந்துள்ளார் . ஆசியன் வுமன் ஃபெஸ்டிவல் ஆகிய விழாவை ஒருங்கிணைத்து வருகிறார் . இதன் காரணமாக இவரது பெயர் , பிபிசிஇன் 100 பெண்கள் பட்டியலில் இடம்பிடித்துள்ளது . கொரோனா காரணமாக பல்வேறு