இடுகைகள்

பொள்ளாச்சி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கழிவுப்பொருட்களிலிருந்து சிஎன்சி இயந்திரம்!

படம்
  மாதிரிப் படம்  கழிவுப்பொருட்களிலிருந்து இயந்திரம்! வேலூர் விஐடியில் படித்து வரும் மூன்றாம் ஆண்டு இயந்திரப் பொறியியல் மாணவர், கவின்பிரபு சுந்தர ராஜ். பூர்வீகம், பொள்ளாச்சி. கவின்பிரபு, வெறும்  1,500 ரூபாயில் சிஎன்சி இயந்திரத்தை உருவாக்கியுள்ளார். இந்த சிஎன்சி இயந்திரம் உற்பத்திதுறையில் (பிளாஸ்டிக், உலோகம், மரம்) பயன்படுகிறது.  மனிதர்கள் உதவியின்றி கணினி கோடிங் மூலம் இயந்திரத்தை எளிதாக இயக்கலாம். எலக்ட்ரானிக் கடைகளில் கழிவாக கிடைக்கும் போல்ட், நட்டுகள், டிவிடி ரைட்டர், பிவிசி குழாய்கள் ஆகியவற்றை பயன்படுத்தி சிஎன்சி இயந்திரத்தை உருவாக்கியுள்ளார் கவின்பிரபு.  தான் உருவாக்கிய சிஎன்சி புரோடோடைப் இயந்திரத்திற்கு காப்புரிமைக்கு விண்ணப்பித்துள்ளார். ”கடந்த ஆண்டு எனது நண்பரின் பிறந்த நாளுக்காக மினியேச்சர் ஓவியம் ஒன்றை உருவாக்க நினைத்தேன். அப்படித்தான் சிஎன்சி இயந்திரத்தை உருவாக்கினேன்” என்றார் கவின்பிரபு.  https://www.newindianexpress.com/good-news/2022/may/22/tn-farmers-son-puts-together-scrap-comes-up-with-ultra-cheap-compact-cnc-machine-2456516.html https://www.thebetterindia.com/286293/tam

ஆயிரம் மரங்களை வளர்த்த பொள்ளாச்சி அரசு உதவிபெறும் பள்ளி

படம்
  பொள்ளாச்சியில் ரெட்டியாரூர் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்குச் சொந்தமான ஐந்து ஏக்கர் நிலம் உள்ளது. இதில், மாணவர்களை மரக்கன்றுகளை ஊன்ற வைத்து ஆயிரம் மரங்களை வளர்த்துள்ளனர். இவற்றை நட ஊக்கப்படுத்தியவர் விவசாய ஆசிரியர் டி பாலசுப்பிரமணியன்.   இதனை நட்டவர்கள் அனைவருமே பள்ளியில் படித்த முன்னாள் மாணவர்கள் என்பது ஆச்சரியமான விஷயம்தானே? ஆயிரம் மரங்கள் இப்போது வளர்ந்துள்ளது ஆச்சரியம் என்றாலும் இதற்கான திட்டமிடல் பத்து ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கியிருக்கிறது. இதனை பள்ளி நிர்வாகம் முன்னெடுத்து அருகிலுள்ள கிராமங்களில் விதைகளை பெற்றிருக்கிறது. தனியார் நிறுவனங்களிடமும் நிறைய விதைகளைப் பெற்றிருக்கிறது. விதைகளை முளைக்க வைத்து அவை முளைவிட்டதும் கிராமத்தினருக்கும், அருகிலுள்ள பள்ளிகளுக்கும் இலவசமாக அரசுப்பள்ளி நிர்வாகம் வழங்கியுள்ளது.  பள்ளியில் விளையும் காய்கனிகளை பறித்து சமைத்து சாப்பிட சமையல் அறையும் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் மதிய உணவு தயாரித்து மாணவர்களுக்கு வழங்குகிறார்கள். இயற்கை விவசாயம் சார்ந்த வல்லுநர்கள், பள்ளிக்கு வந்து மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள். மாணவர்

புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான கூடு!

படம்
  பொள்ளாச்சியில் சரணாலயம் ஜோதி என்ற தன்னார்வ அமைப்பு தொண்டாற்றி வருகிறது. இதைத் தொடங்கிய வனிதா ரங்கராஜூக்கு இப்போது 67 வயதாகிறது. மாவட்டத்தில் மூன்று இடங்களில் இந்த அமைப்பின் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.  வனிதாவுக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் பிறந்தன. அப்போதுதான் நடந்தது முக்கியமான நிகழ்ச்சி. காந்தி நகரிலுள்ள குடிசைப்பகுதிகளுக்கு நலத்திட்டங்கள் தொடர்பாக சென்றிருந்தார். அங்கு மூளை தொடர்பான குறைபாடு உள்ள சிறுவனைப் பார்த்தார். அவனுக்கு உள்ள பிரச்னையை மருத்துவர்கள் செரிபெரல் பால்சி என்று அழைத்தனர்.  பையனை முழுக்க வீட்டிலிருந்தே பார்த்துக்கொள்ள முடியாதபடி அவனது அம்மாவுக்கு பொருளாதார நிலைமை இருந்தது. காலையில் வேலைக்கு போய்விட்டு வந்து பார்த்தால் தரையில் அப்படியே விழுந்து கிடப்பான் குழந்தை. பதறிப்போய் பார்த்தால், உடலில் பல்வேறு இடங்களில் பூனையின் நக கீறல்கள். அவனுக்கு வனிதா வைத்த பெயர் சக்தி. ஆனால் அங்குள்ளவர்கள் அவன் எப்போது தரையில் விழுந்து கிடப்பதால், அவனை பூச்சி என பட்டப்பெயர் வைத்து அழைத்தனர்.  அவனைக் கவனித்துக்கொள்ள ஏதாவது செய்யத் தோன்றியது. உடனே வனிதா தனது தந்தையிடம் சிறிது பணம் பெ