பேரிடர் காலத்தை எதிர்கொள்ள எப்படி தயாராவது? பொருட்கள், ஆலோசனைகள்
பிழைத்திருப்போம் பேரிடர் காலங்களில் உயிர் தப்பிப் பிழைப்பது எப்படி? வடக்கு நாட்டில் தென்னாட்டில் உள்ளவர்கள் பற்றி தெரியாது. தெரிந்துகொள்ளவும் விரும்பவில்லை. அதனால் யாருக்கென்ன நஷ்டம்? என வாழ்கிறார்கள். தென்னாட்டினர். வடநாட்டினர் பற்றி தெரிந்ததால் அவர்களின் மோசடிகளை அறிந்து பத்திரமாக வாழ்கிறார்கள். ஆக, தகவல்களை முடிந்தளவு சேகரித்து வைத்துக்கொள்வது நன்மைதான். அது வளர்ச்சிக்கு உதவும், குறிப்பாக ஆபத்துக்காலங்களில் தட்பவெப்பநிலை தகவல், வானிலை தகவல், ஏன் கல்லூரிகள் நடத்தும் சமுதாய வானொலி கூட பயன் தரும்தான். சில நாடுகளில் வானிலைக்கென தனி வானொலி அலைவரிசையே இயங்குகிறது. அந்தளவு இந்தியா வளரவில்லை என்பதால், உள்ளூர் அளவில் சமூக வலைதளத்தில் பகிரும் தகவல்களை பார்த்து எச்சரிக்கையாக இருக்கலாம். பேரிடர், மதக்கலவரம், மதவாதிகள் ஏற்படுத்தும் வன்முறை, கொள்ளை ஆகியவற்றில் இருந்து தப்பிக்கவும் தகவல்கள் உதவும். உலகத்தைப் பற்றி அறிவது சிறப்பு. அப்படி இல்லையென்றால் உங்கள் ஏரியா பற்றியேனும் அறிவது நல்லது. அப்போதுதான் திடீரென லாக்டௌன் என்று அரச தகராறு செய்தால் முன்னமே பாதிப்பிலிருந்து நம்மையும் குடும்பத்தினர...