டைனோசர் என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியது யார்?
அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி காற்று மாசுபாடு என்றால் என்ன? விவசாயிகள், கழிவுகளை எரிப்பதால் ஏற்படுவதுதான் காற்று மாசுபாடு என ஒன்றிய அரசு கூறுகிறது. அதெல்லாம் கிடையாது. கார்பன் மோனாக்சைடு, நைட்ரஜன் ஆக்சைடு, சல்பர் டையாக்சைடு ஆகிய வாயுக்கள் காற்று மண்டலத்தில் அதிகரிப்பதே காற்று மாசுபாடு என்ற வரையறைக்கு பொருந்தும். பிளாஸ்டிக் தொழிற்சாலைகள், குப்பைகள், கழிவுகளை எரித்தல், படிம எரிபொருட்களை பயன்படுத்துதல், இரும்பு உருக்கு ஆலைகள், காகித உற்பத்தி ஆலைகள் மூலமாகவும் காற்று மாசுபாடு ஏற்படுகிறது. வேளாண்மையை விட தொழிற்சாலை மூலமே அதிக காற்று மாசுபாடு ஏற்படுகிறது. காற்று மாசுபாடு காரணமாக ஏற்படும் நோய்கள் என்னென்ன? ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, புற்றுநோய், தலைவலி, உளவியல் பிரச்னைகள், நெஞ்சுவலி ஆகியவை ஏற்படும். பொல்யூடன்ட் ஸ்டேண்டர்ட் இண்டெக்ஸ் என்றால் என்ன? மாசுபாட்டு தொகுப்பு பட்டியல். இந்த பட்டியலில் பூச்சியம் முதல் ஐநூறு வரை பிரிக்கப்பட்டுள்ளது. எண்களைப் பொறுத்து பாதிப்பை அடையாளம் காணலாம். இந்த அளவீட்டு முறையை அமெரிக்கர்கள் கண்டுபிடித்தனர். தேசியளவில் 1978ஆம் ஆண்டு விரிவுபடுத்...