இடுகைகள்

மூளை குறைபாடு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புறக்கணிக்கப்பட்டவர்களுக்கான கூடு!

படம்
  பொள்ளாச்சியில் சரணாலயம் ஜோதி என்ற தன்னார்வ அமைப்பு தொண்டாற்றி வருகிறது. இதைத் தொடங்கிய வனிதா ரங்கராஜூக்கு இப்போது 67 வயதாகிறது. மாவட்டத்தில் மூன்று இடங்களில் இந்த அமைப்பின் இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன.  வனிதாவுக்கு திருமணமாகி, இரு குழந்தைகள் பிறந்தன. அப்போதுதான் நடந்தது முக்கியமான நிகழ்ச்சி. காந்தி நகரிலுள்ள குடிசைப்பகுதிகளுக்கு நலத்திட்டங்கள் தொடர்பாக சென்றிருந்தார். அங்கு மூளை தொடர்பான குறைபாடு உள்ள சிறுவனைப் பார்த்தார். அவனுக்கு உள்ள பிரச்னையை மருத்துவர்கள் செரிபெரல் பால்சி என்று அழைத்தனர்.  பையனை முழுக்க வீட்டிலிருந்தே பார்த்துக்கொள்ள முடியாதபடி அவனது அம்மாவுக்கு பொருளாதார நிலைமை இருந்தது. காலையில் வேலைக்கு போய்விட்டு வந்து பார்த்தால் தரையில் அப்படியே விழுந்து கிடப்பான் குழந்தை. பதறிப்போய் பார்த்தால், உடலில் பல்வேறு இடங்களில் பூனையின் நக கீறல்கள். அவனுக்கு வனிதா வைத்த பெயர் சக்தி. ஆனால் அங்குள்ளவர்கள் அவன் எப்போது தரையில் விழுந்து கிடப்பதால், அவனை பூச்சி என பட்டப்பெயர் வைத்து அழைத்தனர்.  அவனைக் கவனித்துக்கொள்ள ஏதாவது செய்யத் தோன்றியது. உடனே வனிதா தனது தந்தையிடம் சிறிது பணம் பெ