இடுகைகள்

பொறியியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இனிக்க இனிக்க காதல், நகைச்சுவை என நகரும் பொறியியல் மாணவர்களின் வாழ்க்கை!

படம்
  மேட் தெலுங்கு இசை பீம்ஸ் சிசிரிலோ ஹைதராபாத்தில் உள்ள ரீஜினல் இன்ஸ்டிடியூட் ஆப் எஞ்சினியரிங் கல்லூரி வளாகத்திற்கு ஒரு மாணவன், இரவுநேரத்தில் வேகமாக வருகிறான். அங்கு கட்டப்பட்டுள்ள கயிற்றில் தட்டிவிட்டு கீழே விழுகிறான். எதிரே பார்த்தால் நிறைய மாணவர்கள் நிற்கிறார்கள். கீழே விழுந்த மாணவன், அந்த கல்லூரியில் சேர்ந்துவிட்டு பிறகு என்னமோ பீதியடைந்து அங்கிருந்து தப்பியோட முயல்கிறான். ஆனால் சீனியர் மாணவர்கள் அவனை பிடித்து கட்டி வைத்து தலைவர் சீனியர் வரும்வரை காத்திருக்கிறார்கள். அவர் பெயர் லட்டு. அவர், தானும் இப்படித்தான் கல்லூரியில் சேர்ந்த புதிதில் தப்பியோட முயன்றதாக சொல்லி தனது கதையைக் கூறுகிறார். படம் தொடங்குகிறது.  மனோஜ்,அசோக், தாமோதர் என மூன்று நண்பர்களின் பெயர்தான் படத்தின் தலைப்பு. இந்த பாத்திரங்களில் நடித்தவர்கள் எல்லாருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். குறிப்பாக தாமோதர் பாத்திரத்தில் நடித்த நடிகர். இவரது காமெடி சென்ஸில் தியேட்டரே அதிர்கிறது. அதிலும் படத்தின் கடைசி ட்விஸ்ட் இருக்கிறதே? ஏமாந்துவிட்ட சோகம், வருத்தம் அதை சிரித்துக்கொண்டே வெளிப்படுத்துவார். அதேசமயம் நண்பர்கள் சிரிக்க, எதுக்க

இரு வேறு காலகட்ட கதிர் பாத்திரங்கள் சமூகத்திற்காக உழைக்கும் செயல்பாடுகள் - கதிர் 2022 - தினேஷ் பழனிவேல்

படம்
                கதிர் தினேஷ் பழனிவேல் இரண்டு வேறு காலகட்டங்களில் நடைபெறும் கதை. இரண்டிலும் கதிர் என்ற நபர் எப்படி செயல்படுகிறார். அவரது வாழ்க்கை எப்படி சமூகத்திற்கானதாக மாறுகிறது என்பதையே இயக்குநர் சொல்ல நினைத்திருக்கிறார். யாருக்காக, எதற்கு வாழ்கிறோம் என்ற கேள்விக்கு பதில் காண்பது முக்கியம். இதுதான் தந்தியில் போடுவது போல கதையின் மையம். 1970களில் நடக்கும் கதை. கோவையைச் சுற்றியுள்ள கிராமம் ஒன்றில் உழைப்புக்கு நெல் அல்லாது கூலி தர சொல்லி கம்யூனிஸ்டுகள் கூற, அதை பின்பற்றும் விவசாயிகள் என்ன விளைவுகளை சந்தித்தார்கள் என்பது பின்கதையாக விரிகிறது. தொடக்கத்தில் காவல்துறையினர் மலைப்பகுதி அருகில் கைதிகளுடன் வர, திடீரென சொல்லி வைத்தது ஜீப் நின்றுபோக அங்கே துப்பாக்கிச்சூடு சத்தம் கேட்கிறது. ஜீப்பின் பின்புறத்தில் ரத்தம் கசிகிறது. இதுதான் தொடக்ககாட்சி. இதற்குப் பிறகு படம் நவீன காலத்தில் நகர்கிறது. பொறியியல் படித்துவிட்டு ஊருக்குள் பீர் அடித்துவிட்டு சுற்றுபவன் கதிரவன். அவனது அப்பா, ஊருக்குள் தொழிலதிபராக இருக்கிறார். மகனைப் பார்த்து கவலைப்படுகிறார். சாதி மாறி கல்யாணம் செய்தவர்களை பிடித்து அடிக்கையில்

பாரம்பரிய பயிர்களை நடவு செய்யும் விவசாயி!

படம்
  சிவகங்கையில் வாழும் விவசாயியான கண்ணன், அங்குள்ள விவசாயிகளுக்காக அறுவடைத்திருவிழாவை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார். இதன் நோக்கமே, பாரம்பரிய நெற்பயிர்களை விவசாயிகளிடம் கொண்டுபோய் சேர்ப்பதுதான்.  பொறியாளராக பணியாற்றி வந்த கண்ணன் எப்போது விவசாயி ஆனார், அவர் நடவு குறித்த ஏராளமான விஷயங்களை சொல்வார் என யாருமே நினைத்து பார்த்திருக்க முடியாது. ஆனால் இன்று சூழல் அப்படித்தான் இருக்கிறது. விவசாயம் பற்றி நுட்ப நுணுக்கங்களை கண்ணன் கற்றுக்கொண்டதே ஜனவரி 2018லிருந்துதான் என்றால் பலருக்கும் ஆச்சரியமாக இருக்கும்.  சென்னையில் கட்டுமான நிறுவனத்தில் பொறியாளராக இருந்தவர், 9 டூ 6 மணி வேலையை விட்டு வருவார் என யாருக்கு தெரியும்? கண்ணனுக்கே சொன்னால் கூட நம்பியிருக்க மாட்டார். கண்ணனின் அப்பா காலமானபிறகு, அவரின் தந்தையும் தாத்தாவுமான அழகுகோனார்  கண்ணன் கிராமத்திற்கு வந்து விவசாயம் செய்ய ஆசைப்பட்டிருக்கிறார். அவரது ஆசைப்படி சென்னையில் செய்து வந்த வேலையைவிட்டு விட்டு அம்மா இந்திரா, தம்பி பாலசுப்பிரமணியத்துடன் கிராமத்திற்கு வந்துவிட்டார் கண்ணன்.  கட்டுமான இயந்திரங்களை இயக்கி பழகியவர் கண்ணன். ஆனால் விவசாய விஷயங்களை

கண்டுபிடிப்பாளரை மறைத்த அவரின் அழகு! - ஹெடி லாமர் - இன்றைய வைஃபை தொழில்நுட்பத்தின் அடிப்படையை உருவாக்கியவர்

படம்
    அமெரிக்க நடிகையான ஹெடி லாமர் புகழ்பெற்ற அமெரிக்க நடிகையாகவே பலருக்கும் தெரியும் . ஆனால் அவர் பொறியியலில் ஆர்வம் கொண்டு தனது வீட்டில் க ண்டுபிடிப்புக்கான அறை ஒன்றை வைத்திருப்பது பலருக்கும் தெரியாத சங்கதி . ஆங்கில உலகில் அழகு , நடிப்பு என இரண்டும் சேர்ந்த கலவையாக மக்களைக் கவர்ந்தவர் , லாமர் . 1914 ஆம் ஆண்டு வியன்னாவில் பிறந்தார் . இயற்பெயர் ஹெட்விக் கீஸ்லெர் . நடிப்பு ஆர்வத்திற்காக பள்ளிப்படிப்பை கைவிட்டார் . முதலில் செக்கோஸ்லோவியா சென்றவர் , பின்னாளில் அமெரிக்காவிற்கு வந்தார் . அங்குதான் தனது பெயரை ஹெடி லாமர் என்று மாற்றிக்கொண்டார் . படிப்பு கைவிட்டாலும் ஏராளமான நூல்களைப் படித்து தனக்கு தேவையான அறிவைப் பெற்றுக்கொண்டார் . போக்குவரத்து சிக்னல்களை மேம்படுத்துவது , தனது விமானத்துறை காதலரான ஹோவர்ட் ஹியூஹெஸ் மூலம் வேகமாக செல்லும் விமானத்தை தயாரிக்க உதவினார் . இதனை அமெரிக்க விமானப்படை பின்னாளில் வாங்கிக்கொண்டது . சிறு மாத்திரை மூலம் நீரை கார்பனேட்டட் பானமாக மாற்றுவது என பல்வேறு ஐடியாக்களை சாத்தியப்படுத்தினார் . இரண்டாம் உலகப்போரின்போது , மக்கள் கஷ்டப்படுவதை அவரால் ப

பரஸ்பரம் விட்டுக்கொடுப்பதும், ஏற்றுக்கொள்வதும்தான் காதல்! - மா விந்த கதா வினுமா - தெலுங்கு

படம்
      Maa Vintha Gaadha Vinuma    Written by Siddhu Jonnalagadda, Music by Joy Sricharan Pakala Rohit Cinematography Saiprakash Ummadisingu Directed byAditya Mandala         மா விந்த கதை வினுமா கிருஷ்ணா அண்ட் ஹிஸ் லீலாவிற்கு பிறகு ஆதித்யா மண்டேலாவுடன் அடுத்த கதைக்கு வந்துவிட்டார் சித்து . படத்திலும் சித்தார்த்தான் பெயர் . அதனால் சித்து என்றே பெயர் . முதல் காட்சியில் லேடீஸ் ஹாஸ்டல் ஒன்றில் தங்கியுள்ள வினீதாவை பார்க்க முயல்கிறார் . நடக்கும் தகராறில் சித்துவை போலீஸ் இன்ஸ்பெக்டர் கூட்டிக்கொண்டு போலீஸ் ஸ்டேஷன் செல்கிறார் . அங்கு சென்று , தன்னுடைய கதையை இன்ஸ்பெக்டருக்கு சொல்ல படம் தொடங்குகிறது . போட்டோஷூட்டுக்கான பிளான் பொறியியல் கல்லூரியில் ஜாலியாக படிக்கும் மாணவர் சித்து . முதல்நாளில் சீனியர்கள் ராக்கிங் செய்யும்போது வினிதா என்ற பெண்ணை வைத்து காதல் கல்யாணம் செய்துகொள்வது போல நடிக்க சொல்கிறார்கள் . அப்போதிலிருந்து சித்துவுக்கு வினிதா மீது காதல் பேய் மழையாக கொட்டுகிறது . ஆனால் அதனை சொல்ல மூன்று ஆண்டு தேவைப்படுகிறது . அப்படியும் சென்று காதலை சொல்லிவிடுகி