திரைப்பட திருட்டுக்கு எதிராக தனிநபராக போராடும் நாயகன்!
நேடு விடுதலா ஆசிப்கான், மௌர்யானி தெலுங்கு திரைப்படங்களை சட்டவிரோதமாக வலைத்தளங்களில் வெளியிடுவதைப் பற்றிய படம். அவ்வளவே. கதை எளிமையானது. அதை சொன்ன விதத்தில் எந்த புதுமையும் இல்லை. அப்படியே நேர்கோட்டு வடிவம். சலிப்பு தட்டுகிற படம். படத்தில் நாயகன், கல்லூரி படிப்பை 99 சதவீத மதிப்பெண்களைப் பெற்று முடிக்கிறார். அடுத்து என்ன செய்வது என தெரியாத நிலையில், அப்பாவின் சிபாரிசின் பெயரில் ஹெச்எம் டிவியில் வேலைக்கு சேர்கிறார். அங்கு அவருக்கு சினிமா நிகழ்ச்சிப்பிரிவில் வேலை செய்யக் கூறுகிறார்கள். அப்படி வேலை செய்யும்போது, நடக்கும் சம்பவம் ஒன்றால் பாதிக்கப்பட்டு அதை தீர்க்க முயல்கிறார். இறுதியில் என்னானது என்பதே கதை. தெலுங்கு திரைப்படங்களை திருட்டுத்தனமாக சிதைப்பவர்கள், அதன் உள்ளேயே இருக்கிறார்கள் என்று சொல்கிறது படம். ஆனால் அப்படி திரைப்படத்திருட்டை காட்டியவர்கள் அதை சுவாரசியமாக சொல்ல மறந்துவிட்டார்கள். இதனால் படம் எங்கெங்கோ சென்று எப்படியோ முடிகிறது. படத்தில் வேகமாக நடக்கும் விஷயம், நாயகி நாயகனை காதலிப்பதுதான். நடிகை மௌர்யானி அழகாக இருக்கிறார். ஆனால், அவர் நடிப்பதற்கு பெரிய வாய்ப்பில்லை...