இடுகைகள்

அரசியல் இந்திரா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பால் மனிதர் குரியன்! - வர்க்கீஸ் குரியனின் சாதனை ’அமுல்!’

படம்
வெண்மைப்புரட்சியின் தந்தை வர்க்கீஸ் குரியன்  பிறந்த தினம் இன்று. இன்று பிராந்திய பொருளாதார ஒப்பந்தம் உள்நாட்டு வேளாண்துறையை, பால்துறையை பாதிக்கும் என்று கூறி அதனை தடுக்கின்றனர். இதேபோன்ற சிக்கலை அன்று அமுலின் தலைவரான வர்க்கீஸ் குரியன் சந்தித்தார். அறுபது ஆண்டுகளுக்கு முன்பு நியூசிலாந்திலிருந்தும், ஐரோப்பாவிலிருந்தும் பால் பொருட்கள் இந்தியாவில் இறக்குமதியாகிக் கொண்டிருந்தன. இவை அரசுக்கு உதவினாலும் விவசாயிகளுக்கும் பால் உற்பத்தியாளர்களுக்கும் எந்த ஆதரவையும் வழங்கவில்லை. காங்கிரசின் திரிபுவன்தாஸ் படேலின் ஆதரவில் கைரா மாவட்டத்தில் பல்வேறு ஊக்கமூட்டும் செயல்பாடுகளை குரியன் செய்தார். அனைத்தும் தன்னுடைய மேதமையை உலகிற்கு சொல்வது அல்ல. மக்களுக்கு உதவுவதாகவே அமைந்திருந்தன. கைரா பால் உற்பத்தியாளர் சங்கத்தை திரிபுவன்தாஸ் படேலின் ஆதரவுடன் வர்கீஸ் குரியன் உருவாக்கினார். இன்று அமுல் உலகின் முக்கியமான பால் பொருட்கள் விற்பனை நிறுவனமான உள்ளது. தனியார் நிறுவனம் போல செயல்பட்டாலும் கூட்டுறவு அமைப்பாக மக்களின் நலன்களுக்கானதாக உள்ளது. 1964ஆம் ஆண்டு, பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரி கை