இடுகைகள்

சிவப்புக்கண் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சிவப்புக்கண் மரத்தவளை - எதிரிகளிடமிருந்து தப்பிக்க உதவும் உடல் அமைப்பு

படம்
  சிவப்புக்கண் மரத்தவளை  இத்தவளையின் உடலிலுள்ள பச்சை நிறம், பச்சை இலைகளுக்கு இடையில் மறைந்து கொள்ள உதவுகிறது.  அறிவியல் பெயர்: அகல்ச்னிஸ் கால்டிரியாஸ் (Agalchnis callidryas) குடும்பம்: ஹைலிடே(Hylidae) குழு பெயர்: ஆர்மி (Army) இனம்: அ. கால்டிரியாஸ் (A. callidryas) அளவு: 7 செ.மீ.  காணப்படும் இடம் : மத்திய அமெரிக்கா  சிறப்பு அம்சம்: இரவு வேட்டையாடிகள். பச்சை நிற உடல், ஆரஞ்சு நிற கால், சிவப்பு நிற கண்கள். இதன் சிவப்பு நிற கண்களில் தலா மூன்று கண் இமைகள் உள்ளன. உடலின் பக்கவாட்டில் மஞ்சள், நீலநிற பட்டைகள் உள்ளன. பளீரிடும் நிறங்கள் எதிரிகளிடமிருந்து உயிர்பிழைக்க உதவுகின்றன. காடு, சதுப்புநிலங்கள் உள்ள மரங்களில் வாழ்கிறது.  உணவு: பூச்சி, அந்திப்பூச்சி  எதிரிகள்: பாம்பு, வௌவால், சிலந்தி, பறவை  ஐயுசிஎன் செம்பட்டியல்: அழியும் நிலையில் இல்லாதவை (Least Concern LC) https://www.iucnredlist.org/species/55290/3028059