இடுகைகள்

கிரிக்கெட். பெங்களூரு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பார்வையற்றவர்களுக்கு கௌரவமான வாழ்க்கைதான் முக்கியம்! - முன்னாள் பார்வையற்றோர் கிரிக்கெட் வீரர் மகன்டேஷ்

படம்
  பார்வை இல்லாம் கிரிக்கெட் விளையாடும் ஆசை இருந்தால் என்ன செய்வது?  கர்நாடகத்தின் பெல்காமில் கிராமத்தில் பிறந்த மகன்டேஷ் ஜி கிவாடாசன்னாவர், நன்றாகத்தான் இருந்தார். ஆனால் பிறந்து ஆறு மாதம் ஆனபோது, டைபாய்டு காய்ச்சல் வந்தது. அப்போது கண்பார்வை போய்விட்டது. அதற்கும் மேல் கிராமத்தில் இருந்தால் மருத்துவ வசதி போதாது. கல்வியும் வேறு பயிற்சிகளும் வழங்க முடியாது என மகன்டேஷை பெங்களூரு நகருக்கு அழைத்து வந்தனர் அவரது பெற்றோர்.  உலக பார்வையற்றோர் கிரிக்கெட் கௌன்சிலின் தலைவராக 2011ஆம் ஆண்டு மகன்டேஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் இந்தியாவில் பார்வையற்றோர் கிரிக்கெட் சங்கத்தை துணை நிறுவனராக இருந்து தொடங்கினார். மாற்றுத் திறனாளிகளை புறக்கணிக்காமல் அவர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை பெற்றுத்தருவதை தனது லட்சியமாக கொண்டிருக்கிறார் மகன்டேஷ்.  2011ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்புப்படி, இந்தியாவில் 70 மில்லியன் பேர் இப்படி மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். கல்வி, வேலைவாய்ப்பு என பலவற்றிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு நிறைய புறக்கணிப்புகள் நடக்கின்றன. அவற்றைத் தீர்த்து வைப்பதே மகன்டேஷின் முக்கியமான பணி.  பள்ளியில் படிக்