இடுகைகள்

தொழிற்சாலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதீத நிலையை எட்டும் காலநிலை மாற்ற விளைவுகள்

படம்
  காலநிலை மாற்றம் குடிநீர் பற்றாக்குறை, காட்டுத்தீ, கடல் மட்டம் உயர்வு, மழை வெள்ளம் சமயத்தில் மட்டும் நாளிதழ்கள் பத்திரிகைகள் உறக்கத்திலிருந்து எழுந்து செய்திகளை வெளியிடுவார்கள். மற்ற நேரங்களில் கோவிலுக்கு செல்ல பிரதமர் செய்த விரதம் என சொம்படிக்கும் கட்டுரைகளை எழுதிக்கொண்டிருப்பார்கள். இதற்கு, சில ஆங்கில தேசிய நாளிதழ்கள் விதிவிலக்காக உள்ளன. அவர்களை பெரிதாக குறை சொல்ல ஏதுமில்லை. வாங்கிய பணம் அப்படி பேச, எழுத வைக்கிறது. பிழைப்புவாதிகள் அவர்களுடைய வேலையைப் பார்க்கட்டும். நாம், காலநிலை மாற்றம் பற்றிய விஷயத்தைப் பார்ப்போம்.  1850ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை உலகளவில் 1.1 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்ந்துள்ளது. இதற்கு இயற்கை ஒரு காரணம் என்றாலும், மனித செயல்பாடுகள் மற்றொரு முக்கியமான காரணம் என்பதை மறுக்க முடியாது.   வெப்பம் அதிகரித்து வருவதால் வெப்ப அலை, பஞ்சம், வெள்ளம், புயல், காட்டுத்தீ சம்பவங்கள் உலகமெங்கும் நடந்துவருகின்றன. காலநிலை மாற்றத்தில் எல் நினோ, லா நினோ ஆகியவை ஏற்படுத்திய தாக்கம் பற்றி அமெரிக்க தேசிய அறிவியல் கழகம், ராயல் சங்கம் ஆகிய இரு அமைப்புகள் கிளைமேட் சேஞ்ச் - எவிடென்ஸ் அண்ட்

நேரு செய்த பெரும் தவறு இதுதான்! - அரவிந்த் பனகரியா, பொருளாதார பேராசிரியர், கொலம்பியா

படம்
                இந்தியா வல்லரசாக மாறுவதை தடுத்த நேரு இந்தியா தனது 75 ஆவது ஆண்டில் காலடி எடுத்து வைத்துள்ளது . ஆனால் தனது நூறாவது ஆண்டைத் தொடும்போது வல்லரசாக வளர்ச்சி பெற்ற நாடாக மாறியிருக்குமா என்பதே சந்தேகமாக இருக்கிறது . சுதந்திரம் பெற்று ஒரு நாடு 75 ஆண்டுகள் கடந்து வந்திருக்கிறது என்பது பெரிய விஷயம் . பிற நாடுகள் இதே காலகட்டத்தில் இந்தியாவை விட மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளனர் . ஆனால் அதில் பின்தங்கிவிட்டோம் . பொருளாதார ரீதியாக இந்தியா பெரும்தோல்வியை தழுவியுள்ளது . இதற்கு முக்கியமான காரணம் , சுதந்திரம் பெற்றபிறகு ஆட்சிக்கு வந்த பிரதமரான நேருவும் அவர் கடைபிடித்த சோசலிச கொள்கையும்தான் . பலருக்கும் கேளவிகள் மனதில் தோன்றலாம் . அவர் கடைபிடித்த கொள்கையில் என்ன பிரச்னை என்று ? அவர் பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கினார் . கனரக பெரும் தொழிற்சாலைகளை கட்டினார் . இவற்றில் கிடைக்கும் லாபம் அரசுக்கு வரும் . இது தனியாரின் சொத்துக்களைப் போல அரசு சொத்தாக மாறும் என நினைத்தார் . இந்த தொழிற்சாலைகளுக்கான முதலீடு அதிகம் . நேருவின் சோசலிசம் , மார்க்சிசத்தின் புரட்சிகர கூறுகளை த