இடுகைகள்

மதுரை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஏழை மாணவர்களுக்கு உதவும் முன்னாள் ராணுவ வீரர்

படம்
  மதுரையைச் சேர்ந்தவர் ஜிஎம் ராமச்சந்திரன். இவர் தேனி பெரியகுளத்தில் தங்கி இளைஞர்களுக்கு உடற்பயிற்சி தொடர்பான ஆலோசனைகளை வழங்கி வருகிறார். ராமச்சந்திரன்,  ராணுவ வீரராக பணியாற்றி ஓய்வு பெற்றார். பிறகு, வருவாய்த்துறையில் வேலை செய்துள்ளார். பின்னாளில்தான் பழனிக்கு இடம் மாறி வாழ்ந்துகொண்டிருந்தார். அப்போது காலையில் ஜாக்கிங் பயிற்சிக்கு சென்றார். சாலையில் இவரைப் பார்த்து இன்ஸ்பிரேஷன் ஆன சிலர், ஃபிட்னெஸ் பற்றிய அறிவுரைகளைக் கேட்டிருக்கின்றனர். ஆகா, என  புளகாங்கிதம் அடைந்த ராமசந்திரன் உலகத்திற்கு ஏதாவது சொல்ல நினைத்தார். அதை ஆரோக்கியம் தொடர்பாக அமைத்துக்கொண்டு மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறார்.  ராமச்சந்திரனுக்கு விளையாட்டில்தான் தொடக்கம் முதலே ஆர்வம். இதனால் படிப்பில் சுமாராகவே இருந்தார். ஜிம்னாஸ்டிக்ஸ், தடகளப் போட்டிகளில் சிறப்பாக செயல்பட்டார். இதை வைத்துத்தான் 1976ஆம் ஆண்டு ராணுவத்தில் வேலைக்குச் சேர்ந்தார்.  ராமச்சந்திரன் தடகளப் பயிற்சி கொடுப்பவர்கள் எல்லோருமே வறுமையான பின்புலத்தைக் கொண்டவர்கள். இவர்களுக்கு ஓடுவதற்கும், கயிற்றைப் பிடித்து ஏறுவதற்கும், நீளம் தாண்டுவதற்கும் பயிற்சி அ

குழந்தைகளுக்கு உணவளிக்கும் மதுரை பள்ளிக்கூட ஆசிரியர்கள்!

படம்
  மாணவர்களுக்காக உழைக்கும் ஆசிரியர்கள்! ஆசிரியர்களின் வேலை என்ன? மாணவர்களுக்கு ஒழுங்காக பாடம் எடுப்பது,அவர்களை  கனவிலும் நினைத்து பார்க்க முடியாத மதிப்பெண்களுடன் தேர்ச்சி அடையச்செய்வது. வேறு என்ன இருக்கிறது என பலரும் நினைப்பார்கள். ஆனால் பெருந்தொற்று அனைத்தையும் மாற்றிவிட்டது. மதிய உணவுக்காகவே அரசுப்பள்ளியில் படிக்க சேர்ந்த குழந்தைகள் பலரும் குழந்தை தொழிலாளிகளாக மாறிவிட்டனர். எத்தனை பேர் திரும்ப பள்ளிக்கு வருவார்கள் என்பதே தெரியாத நிலை உள்ளது.  இந்நிலையில் மதுரையில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளி ஒன்று மாணவர்களுக்கு மதிய உணவு கொடுத்து அவர்களை புதுமையான வழிகளில் கல்வியை கற்றுக்கொடுக்கவும் முயன்று வருகிறது. மார்ச் 2020 ஆம் ஆண்டு பெருந்தொற்று காரணமாக பள்ளி மூடப்பட்டது. ஆனால் ஆசிரியர்கள் கடந்த ஆண்டு ஜூலை முதல் மாணவர்களுக்கு கல்வியை மரத்தடிக்கு மாற்றிக்கொண்டனர். இதனால் பிற பள்ளி மாணவர்களும் அவர்களுடன் சேர்ந்து கற்று வருகின்றனர். கூடவே ஆசிரியர்கள் ஏழை மாணவர்களுக்கு தங்களது ஊதியத்தில் இருந்து 3000 ரூபாயை போட்டு சாப்பாடும் தயாரித்து வழங்கினர். இதைப் பார்த்த பல்வேறு தொண்டு நிறுவனங்கள் இன்று அப்பொற