இடுகைகள்

நீலப்பொருளாதாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கடலைப் பாதுகாப்பதை வெறும் பேச்சாக அன்றி, செயலாக மாற்ற வேண்டும்! - பேட்ரிசியா ஸ்காட்லாந்து

படம்
  பேட்ரிசியா ஸ்காட்லாந்து, காமன்வெல்த் பொது செயலர் பேட்ரிசியா ஸ்காட்லாந்து, காமன்வெல்த் பொது செயலர் காமன்வெல்த் அமைப்பின் பொதுச்செயலர் பேட்ரிசியா ஸ்காட்லாந்து. கடலை பாதுகாக்கும் செயல்பாட்டினை ஜி20 மாநாட்டை நடத்தும் இந்தியா முன்னெடுக்கும் என நம்புகிறார். நீலப்பொருளாதாரம் என்பதை எப்படி வரையறுக்கிறீர்கள்? உலக நாடுகள் வரையறுத்துள்ள நீலப்பொருளாதாரம் என்பதையே நானும் கூறுகிறேன். கடலை சூழலுக்கு உகந்த வழியில் பயன்படுத்தும்போது, அதைச் சார்ந்த   மக்களின் வாழ்க்கையும் ஆரோக்கியமான பாதைக்கு திரும்பும். நாம் ஏற்கெனவே நிலத்தை பெருமளவு பயன்படுத்திவிட்டோம். எனவே, இப்போது கடலில் இருக்கும் இயற்கை வளங்களை கவனத்துடன் பயன்படுத்தவேண்டும். நாம் நிலத்தை மோசமாக பயன்படுத்தியது போல கடலை, அதன் வளத்தை பயன்படுத்தக்கூடாது என்பதை மனதில் கொள்ளவேண்டும். நீலப்பொருளாதாரத்தில் உள்ள ஆபத்துகள் என்ன? இப்படி ஏற்படும் ஆபத்துகள் நாட்டுக்கு நாடு மாறுபடக்கூடியவையா? கடலை தங்களது வாழ்வாதாரமாக, பொருளாதார அடிப்படையாக கொண்டுள்ள நாடுகளைப் பொறுத்து இதன் பாதிப்புகள் மாறுபடும். காலநிலை மாற்றம், கடல்நீரில் அமிலத்தன்மை அதிகரித்தல், பி

நீலப்பொருளாதாரம் மக்களுக்கு முக்கியமானது! கெர்ஸ்டன் ஃபோர்ஸ்பெர்க்

படம்
  நேர்காணல் கெர்ஸ்டன் ஃபோர்ஸ்பெர்க் கடல் உயிரியலாளர் பிளானட்டோ ஓசனோ என்ற குழுவில் என்ன விஷயங்களை  முக்கியத்துவப் படுத்துகிறீர்கள்?  எங்கள் குழுவினர் கடல் சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு, பிரசாரம், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு உதவி வருகிறோம். இதில் குழந்தைகள், ஆசிரியர்கள், மீனவர்கள், அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் என அனைவருமே உள்ளடங்குவர். இவர்களை வைத்து கடல் சார் ஆராய்ச்சி, கல்வி, நிலைத்த மேம்பாடு ஆகியவற்றை அடைய முயல்கிறோம்.  மீனவர்கள், கடல் உயிரினப் பாதுகாப்பிற்கு எதிரியாயிற்றே?  அவர்களோடு எப்படி பணிபுரிகிறீர்கள்? மண்டா ரே, ஆமைகள் ஆகியவற்றை நாங்கள் மீனவர்களுடன் சேர்ந்து பாதுகாக்க முயல்கிறோம். மீனவர்களுக்கு நாங்கள் இதுபற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளோம். அவர்களது வலையில் மண்டா ரே மீன், ஆமைகள் சிக்கினால் எங்களுக்கு தகவல் கொடுப்பார்கள். நாங்கள் அந்த உயிரினங்கள் பற்றிய தகவல்களை மீனவர்களிடம் இருந்து தான் பெறுகிறோம்.  நீல பொருளாதாரம் என்று கூறுகிறீர்களே? அதை விளக்கி கூறுங்களேன். மீன்வளம், சுற்றுலா, கடல்மேம்பாடு, துறைமுகம் என நிறைய துறைகள் கடல் சார்ந்து இயங்குக