நீலப்பொருளாதாரம் மக்களுக்கு முக்கியமானது! கெர்ஸ்டன் ஃபோர்ஸ்பெர்க்

 












நேர்காணல்

கெர்ஸ்டன் ஃபோர்ஸ்பெர்க்

கடல் உயிரியலாளர்

பிளானட்டோ ஓசனோ என்ற குழுவில் என்ன விஷயங்களை  முக்கியத்துவப் படுத்துகிறீர்கள்? 

எங்கள் குழுவினர் கடல் சார்ந்த உயிரினங்களின் பாதுகாப்பு, பிரசாரம், உள்ளூர் மக்களுக்கான வேலைவாய்ப்பு ஆகியவற்றுக்கு உதவி வருகிறோம். இதில் குழந்தைகள், ஆசிரியர்கள், மீனவர்கள், அரசு அதிகாரிகள், தனியார் நிறுவனங்கள் என அனைவருமே உள்ளடங்குவர். இவர்களை வைத்து கடல் சார் ஆராய்ச்சி, கல்வி, நிலைத்த மேம்பாடு ஆகியவற்றை அடைய முயல்கிறோம். 

மீனவர்கள், கடல் உயிரினப் பாதுகாப்பிற்கு எதிரியாயிற்றே?  அவர்களோடு எப்படி பணிபுரிகிறீர்கள்?

மண்டா ரே, ஆமைகள் ஆகியவற்றை நாங்கள் மீனவர்களுடன் சேர்ந்து பாதுகாக்க முயல்கிறோம். மீனவர்களுக்கு நாங்கள் இதுபற்றி விழிப்புணர்வு பிரசாரம் செய்துள்ளோம். அவர்களது வலையில் மண்டா ரே மீன், ஆமைகள் சிக்கினால் எங்களுக்கு தகவல் கொடுப்பார்கள். நாங்கள் அந்த உயிரினங்கள் பற்றிய தகவல்களை மீனவர்களிடம் இருந்து தான் பெறுகிறோம். 

நீல பொருளாதாரம் என்று கூறுகிறீர்களே? அதை விளக்கி கூறுங்களேன்.

மீன்வளம், சுற்றுலா, கடல்மேம்பாடு, துறைமுகம் என நிறைய துறைகள் கடல் சார்ந்து இயங்குகின்றன.  இந்த செயல்பாடுகள்தான் நமக்கு வருவாயை உருவாக்கித் தருகிறது. இதனைத் தான் நீலப் பொருளாதாரம் என குறிப்பிடுகிறேன்.

கடல் பாதுகாப்பு பற்றிய அண்மைய நிகழ்ச்சிகள் ஏதேனும் கூறுங்களேன்.

குழந்தைகளோடு ஆன்லைன் வழியாக உரையாடிய நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் குழந்தைகளோடு மீனவர்களும் பங்கேற்றனர். அதில் குழந்தைகள் மீனவர்களிடம் நீங்கள் என்ன வேலை செய்கிறீர்கள், என்ன சமைத்து சாப்பிடுவீர்கள் என சிறிய விஷயங்களாக நிறைய விஷயங்களைக் கேட்டுத் தெரிந்துகொண்டனர். இந்த நிகழ்ச்சியை என்னால் மறக்க முடியாது. 


Time(jeffrey kluger)

 apr 25 2022

https://www.rolex.org/rolex-awards/environment/

https://www.ashoka.org/en-us/fellow/kerstin-forsberg

https://edition.cnn.com/2021/05/03/americas/kerstin-forsberg-oceans-spc-intl/index.html

கருத்துகள்