சுகாதாரமான குடிநீர் வசதி அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை! - பீட்டர் கிளீக்











நேர்காணல்

பீட்டர் கிளீக்

சூழல் அறிவியலாளர் 

அமெரிக்காவின் ஓக்லாந்து நகரைச் சேர்ந்த அறிவியலாளர், பீட்டர் கிளீக். பசிஃபிக் இன்ஸ்டிடியூட் (Pacific Institute) என்ற அமைப்பைத் தொடங்கி, சூழல் பிரச்னைகளைப் பற்றி பேசி எழுதி வருகிறார். 

நீருக்கும் மனிதர்களின் முன்னேற்றத்திற்கும் தொடர்பிருக்கிறது என எப்படி கூறுகிறீர்கள்?

இன்றுவரை,  தூய குடிநீர், சுகாதார வசதி என்பது  அனைத்து மக்களுக்கும் கிடைக்கவில்லை. இது நமது மிகப்பெரும் தோல்வி. தூய குடிநீர், சுகாதார வசதிகள் அனைத்து மக்களுக்கும் கிடைக்க அரசு அதிக நிதி செலவிட வேண்டும். குடிநீர், சுகாதாரம் ஆகியவற்றில் கவனம் செலுத்தினாலே மனிதர்களுக்கு ஏற்படும் பிற பிரச்னைகள் தீர்ந்துவிடும்.  

சிறந்த நீர்மேலாண்மைக்கான எடுத்துக்காட்டுகள் உள்ளனவா?

சிங்கப்பூர் நாட்டில் தூய குடிநீர், கழிவுநீர் மறுசுழற்சி, புத்திசாலித்தனமான நீர்ப்பாசன முறைகளைக் கையாள்கிறார்கள். அமெரிக்காவின் கலிஃபோர்னியா நகரில் விவசாயிகள் நீரை எப்படி சிறப்பாக பயிர்களுக்குப் பயன்படுத்துவது என அடையாளம் கண்டுள்ளனர். 

காலநிலை மாற்றத்தின் விளைவுகள் இந்தியாவின் பருவகாலத்தைப் பாதிக்குமா?

நிச்சயமாக. காலநிலை மாற்றம் காரணமாக உலக நாடுகளில் பஞ்சமும், வெள்ள பாதிப்பும் ஏற்பட்டு வருகின்றன. மேலும், வெப்பம் காரணமாக இமயமலையிலுள்ள பனிக்கட்டிகளும் உருகி வருவதால், மக்களுக்கு குடிநீர் பாதிப்பு ஏற்படலாம். காலநிலை மாற்றம் பருவ காலங்கள் மற்றும் அதன் தீவிரத்தன்மையில் மாறுபாடுகளை ஏற்படுத்தும். 

https://www.gleick.com/


Indias monsoon faces climate change earth needs a soft path for water now 

TOI 

9.7.2022

கருத்துகள்