பஞ்சத்தை ஊக்குவிக்கும் வெப்ப அலை! - உண்மையா? உடான்ஸா?

 











பஞ்சத்திற்கும் வெப்ப அலைக்கும் வேறுபாடு உண்டு!


உண்மை. மழைப்பொழிவு குறைவால் ஏற்படும் அதீத உணவு, குடிநீர் தட்டுப்பாட்டை பஞ்சம் என்று கூறலாம்.இப்படி ஏற்படும் பஞ்சம் மாதங்கள், ஆண்டுகள் என நீடிக்கலாம். நாட்டின் பல்வேறு இடங்களில் கூடுதலான அளவில் வெப்பநிலை நிலவுவது, வெப்ப அலை ஆகும். வெப்பஅலை பாதிப்பு, பஞ்சத்தையும் காட்டுத்தீயையும் ஊக்குவிக்கிறது. பஞ்சம், வெப்ப அலை என  இரண்டாலும் மக்களின் இறப்பு கூடும், பயிர் விளைச்சல் பாதிக்கப்படும். 

நிலவு அழிந்தால் பூமி பாதிக்கப்படும்!


உண்மை. நிலவின் ஈர்ப்புவிசையால் தான் கடல் அலைகள் உருவாகின்றன என்பது அறிவியல் உண்மை. நிலவு இல்லாத சூழலில், உலகம் முழுவதும் பருவகாலங்களில் குளறுபடி உருவாகும்.  நிலவின் ஈர்ப்புவிசை பூமியின் சுழற்சியைக்  கட்டுப்படுத்துகிறது. எனவே, நிலவு இல்லாதபோது, பூமி சுற்றும் வேகம் அதிகரிக்க வாய்ப்புள்ளது. இதனால் பகல், இரவு ஆகிய காலவேளையின் நீளம் மாறும். 

https://www.syfy.com/syfy-wire/if-the-moon-were-destroyed-what-would-it-mean-for-earth


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்