நரம்பியல் துறையில் செய்த ஆய்வுக்காக நோபல் பரிசு வென்றவர்! - சான்டியாகோ ராமோன் ஒய் கஜல்
சான்டியாகோ ராமோன் ஒய் கஜல் (Santiago Ramón y Cajal
1852-1934)
ஸ்பெயின் நாட்டின் பெட்டிலா டி அரகான் என்ற நகரில் பிறந்தார். மருத்துவர் ஆகும் லட்சியத்தை தனது தந்தையிடமிருந்து சான்டியாகோ பெற்றார். 1873இல் மருத்துவராகி, க்யூபாவில் ராணுவ மருத்துவராகப் பணியாற்றினார். ராணுவப்பணியை நிறைவு செய்தவர், ஸ்பெயின் நாட்டிற்கு திரும்பி முனைவர் பட்டம் பெற்ற ஆண்டு, 1877.
ஸரகோஸா பல்கலைக்கழக அருங்காட்சியகத்தில் பணியாற்றியவர், பிறகு வேலன்சியா பல்கலைக்கழகத்தில் உடற்கூறியல் பேராசிரியரானார். 1887ஆம் ஆண்டு பார்சிலோனாவுக்குச் சென்றார். 1892ஆம் ஆண்டு மேட்ரிட் பல்கலைக்கழகத்தில் தசை, நோய் அறிகுறி துறையில் பணியாற்றினார். இங்குதான் நரம்பியல் பற்றிய முக்கியமான கண்டுபிடிப்புகளை செய்தார். 1906ஆம் ஆண்டு நரம்பியல் துறையில் செய்த ஆராய்ச்சிக்காக கோல்ஜி மற்றும் சான்டியாகோ ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது. 1989ஆம் ஆண்டு சான்டியாகோ, ரீகலெக்ஷன்ஸ் ஆஃப் மை லைஃப் (Recollections of My Life) என்ற தனது வாழ்க்கை வரலாற்றை எழுதி வெளியிட்டார்.
https://www.nobelprize.org/prizes/medicine/1906/cajal/article/
கருத்துகள்
கருத்துரையிடுக