இடுகைகள்

விளக்கம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக்கொள்ளும் கோஸ்டிங் மனநிலை!

படம்
  திடீரென காணாமல் போகும் காதலி!  கோஸ்டிங் என்பது இப்போதைக்கு டேட்டிங் ஆப்ஸ்களில் அதிகம் நிலவும் ஒரு சூழல் என வைத்துக்கொள்ளலாம்.  ஒருவர் உங்களோடு நன்றாக பழகிக்கொண்டிருக்கிறார். தொலைபேசி எண், வாட்ஸ்அப், டெலிகிராம், ஃபேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் என அனைத்து கணக்குகளிலும் ஒன்றாக இருக்கிறீர்கள். சாட் செய்கிறீர்கள். இன்பாக்ஸில் செய்தி போடுகிறீர்கள். வீக் எண்டில் சந்திக்கிறீர்கள் என இருக்கும் உறவு ஒருநாள் திடீரென மாறுகிறது. எப்படி என்றால் நீங்கள் பேசிக்கொண்டிருக்கும் நண்பர், தோழி திடீரென அனைத்து தொடர்புகளையும் உங்களுடன் துண்டித்துக்கொள்கிறார். உங்களுக்கு என்னாகும்? என்னாச்சு என பதற்றமாவீர்கள். ஆனால் அவர் அழைப்பு, குறுஞ்செய்தி, சமூக வலைத்தள செய்தி என அனைத்தையும் புறக்கணிக்கிறார். இது மனதளவில் யாரையும் பாதிக்க கூடியது.  இதைத்தான் கோஸ்டிங் என்கிறார்கள். ஒருவர் தான் கொண்டுள்ள உறவை அனைத்து மட்டங்களிலும் துண்டித்துக்கொண்டு கண் பார்வைக்கே படாமல் காணாமல் போவது.  கோஸ்டிங் என்பது உறவுகளுக்கு மட்டுமல்லாது, பல்வேறு குற்றங்களுக்கும் கூட ஆதாரமாக இருக்கலாம் என டேட்டிங் ஆப்கள் நினைக்கின்றன. எனவே, அவை இத